மனோபாலா இறுதி சடங்கிற்கு வரல.. ஐபிஎல் பாக்கநேரம் இருக்கா.. நயன்தாராவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை : மனோபாலா இறுதி சடங்கிற்கு வராமல் ஐபிஎல் மேட்ச் பாக்க வந்த நயன்தாராவை ரசிகர்கள் இணையத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அரசியல் கட்சிதலைவர்கள், சினிமா பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் அணிக்கான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில், நான்கு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நயன்தாரா : இன்றைய போட்டியை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன், அனிருத், தனுஷ் மற்றும் பிரபலங்கள் பார்த்து ரசித்தனர். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதில், விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத், தனுஷ் விசில் அடித்து போட்டியை ரசித்து பார்த்தனர்.

திட்டும் நெட்டிசன்ஸ் : இந்த போட்டோ இணையத்தில் வைரலானதை அடுத்து டென்ஷனான இணையவாசிகள், இரண்டு தினத்திற்கு முன்தான் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் மனோபாலா உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள உங்களுக்கு நேரம் இல்லை, ஐபிஎல் பாக்க மட்டும் உங்களுக்கு நேரம் இருக்கா என்று நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஜவான் : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜவான் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் கசிந்தன.


Click it and Unblock the Notifications











