»   »  சென்னை டைம்ஸின் 2014ல் அதிகம் விரும்பப்பட்டவர்கள் பட்டியலில் அஜீத் ஃபர்ஸ்ட், விஜய் எய்த்

சென்னை டைம்ஸின் 2014ல் அதிகம் விரும்பப்பட்டவர்கள் பட்டியலில் அஜீத் ஃபர்ஸ்ட், விஜய் எய்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் பிரிவான சென்னை டைம்ஸ் நடத்திய வாக்கெடுப்பில் 2014ம் ஆண்டின் மிகவும் விரும்பப்பட்ட நபர்கள் பட்டியலில் அஜீத் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் பிரிவான சென்னை டைம்ஸ் 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நபர்கள் யார் என்பது பற்றி ஆன்லைனில் பொது மக்களிடம் வாக்கெடுப்பை நடத்தியது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.


வாக்குகள் அடிப்படையில் 25 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு.


அஜீத்

அஜீத்

2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நபர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் அஜீத். ஓபனிங் கிங் என்று அழைக்கப்படும் அஜீத்தை பிற நடிகர்களின் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சூர்யா

சூர்யா

அதிகம் விரும்பப்பட்ட நபர்கள் பட்டியலில் அஜீத்துக்கு அடுத்த இடத்தில் அதாவது இரண்டாவது இடத்தில் இருப்பவர் சூர்யா. சூர்யா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


தனுஷ்

தனுஷ்

பார்க்க சுள்ளானாக இருந்தாலும் நடிப்பில் வெளுத்து வாங்கும் தனுஷ் சென்னை டைம்ஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். பல நடிகர்கள் விருதுகளுக்கு ஆசைப்படுகையில் விருதுகள் தனுஷை தேடித் தேடி வருகின்றன.


விக்ரம்

விக்ரம்

உடல், பொருள், ஆவி என்று அனைத்தையும் நடிப்புக்காக மட்டுமே அர்பணித்துள்ள சீயான் விக்ரம் அதிகம் விரும்பப்பட்ட நபர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆர்யா

ஆர்யா

சென்னை டைம்ஸ் பட்டியலில் ஆர்யாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. ஆர்யா என்றாலே கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இருக்காது. மேலும் அவர் நடிகைகளுக்கு பிரியாணி விருந்து கொடுப்பதற்கும், நண்பேன்டாக்களுக்கு உதவி செய்வதற்கும் பெயர் போனவர்.


விஜய்

விஜய்

சென்னை டைம்ஸ் பட்டியலில் 6வது இடத்தில் அதர்வாவும், 7வது இடத்தில் துல்கர் சல்மானும், 8வது இடத்தில் விஜய்யும், 9வது இடத்தில் வித்யூத் ஜாம்வாலும், 10வது இடத்தில் விஜய் சேதுபதியும், 11வது இடத்தில் சிம்புவும், 15வது இடத்தில் அனிருத்தும், 16வது இடத்தில் கார்த்தியும், 17வது இடத்தில் சிவகார்த்திகேயனும், 19வது இடத்தில் விஷாலும் உள்ளனர்.


English summary
Ajith is Chennai Times Most Desirable Man 2014. Vijay has managed to get 8th place only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil