சென்னையில் அர்னால்ட்... சிறப்பான வரவேற்பு!
சென்னை: ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹாலிவுட்டின் பிரபல நடிகரும் உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் மனம் கவர்ந்தவருமான அர்னால்ட் இன்று முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளார்.

தனி விமானம் மூலம் வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர்.

படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியுள்ளார்.
இன்று மாலை 5.30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஐ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பாடல்களை வெளியிடுகிறார் அர்னால்ட். அவற்றை ரஜினிகாந்த் பெற்றுக் கொள்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications