Kanguva: கங்குவா படத்தினை திட்டம்போட்டு காலி செய்துவிட்டார்கள்.. ஓபனாக பேசிய தியேட்டர் ஓனர்!

சென்னை: சூர்யா - திஷா பதானி ஆகியோரது நடிப்பில் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. படம் கிட்டத்தட்ட ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தினை சிறுத்தை சிவா இயக்கினார். ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தினை தயாரித்தது. சூர்யாவின் நடிப்பில் இதுவரை வெளியான மற்ற படங்களைவிட இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு அதிகம் என படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் சரிவினைச் சந்தித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான திரையரங்களுகளில் ஒன்றாக இருக்ககூடிய சென்னை உட்லாண்ட்ஸ் தியேட்டர் ஓனர் கங்குவா படம் குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

கங்குவா படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி இருந்தாலும் படக்குழுவினர் தொடங்கி பல்வேறு திரையுலகினர் படத்திற்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே படக்குழுவினர் தங்களது படத்திற்கு ஆதரவாக கருத்து சொல்வது என்பது வாடிக்கையான விஷயம்தான். அதேநேரத்தில் படம் குறித்து ரசிகர்கள் கூறும்போதுதான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும்.

suriya kanguva woodlands theater

அதாவது, ஒரு பெரிய நடிகரின் படம் என்பது முதல் மூன்று நாட்களுக்கு அசால்ட்டாக படம் வசூல் குவித்துவிடும். ஆனால் அதன் பின்னர் குடும்ப ரசிகர்கள், ஜென்ரல் ஆடியன்ஸ் படம் பார்க்க வரும்போதுதான், படத்தின் வெற்றி நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் சில மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. குறிப்பாக கருடன், மகாராஜா, லப்பர் பந்து, ஸ்டார், அமரன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

suriya kanguva woodlands theater

ஜோதிகா: ஆனால் கங்குவா படம் சூர்யாவின் ரசிகர்கள் மத்தியிலேயே பெரும் வரவேற்பைப் பெறவில்லை. பெரும்பாலான ரசிகர்கள் படத்தில் உள்ள குறைகளை அவர்களே சுட்டிக்காட்டினார்கள். படம் குறித்து ஜோதிகா எழுதும்போதும் படத்தின் குறைகளைக் கூறினார். ஆனால் படம் விமர்சகர்கள் மத்தியில் திட்டமிட்டு காலிசெய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சென்னை, உட்லாண்ட்ஸ் தியேட்டர் ஓனர் வெங்கடேசன் பேட்டி ஒன்றில் கூறியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

suriya kanguva woodlands theater

திட்டம்: அதாவது, " மீடியாவில்..‌Paid Media, Unpaid Media என இருவகை உண்டு. Paid media படத்தை பாராட்டுவார்கள். மற்றவர்கள் கங்குவா படத்தை திட்டம் போட்டு காலி செய்து விட்டார்கள். தயாரிப்பாளரின் அனுமதியின்றி யூட்யூப் ரிவியூவை அப்லோட் செய்யக்கூடாதென கோர்ட்டில் தடை வாங்கப்போகிறோம். ஹோட்டலில் தோசை நன்றாக இல்லை என்றால்.. வாசலில் மைக் பிடித்து விமர்சனம் செய்ய முடியுமா?

suriya kanguva woodlands theater

வசூல்: படத்தின் வசூலை பற்றி கேள்வி கேட்க நீங்கள் யார்? உங்கள் பிள்ளைகள் எவ்வளவு மார்க் வாங்கினார்கள் என நாங்கள் கேட்க முடியுமா? தியேட்டர் என்பது ப்ரைவேட் ப்ராப்பர்டி. யார் வர வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். இனி தயாரிப்பாளர் ஓகே சொல்லும் சேனல்களை மட்டும்தான் உள்ளே விடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

suriya kanguva woodlands theater

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X