மெர்சலுக்கு போட்டியா சென்னையில் ஒரு நாள் 2?: ரசிகர்கள் விமர்சனம்
சென்னை: சென்னையில் ஒரு நாள் 2 படம் பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி உள்ளிட்டோர் நடித்த சென்னையில் ஒரு நாள் 2 படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. சென்னையில் ஒரு நாள் படத்தின் தொடர்ச்சி அல்ல இது.
படத்திற்கு துருவங்கள் 16 இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அவரது இசை ஆறுதலாக உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் என்ன தெரிவித்துள்ளார்கள் என்று பார்ப்போம்,
த்ரில்லர்
#ChennaiyilOruNaal2 - சுவாரஸ்யமான த்ரில்லர். நல்ல படம்... பின்னணி இசை தான் படத்தின் தூண்
குடோஸ்
சென்னையில் ஒரு நாள் 2 படம் நன்றாக இருப்பதாக ராதிகா சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது வித்தியாசமான படம் என்று கூறியுள்ளார்.
ரசிகர்
ராதிகாவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் சென்னையில் ஒரு நாள் 2 நல்ல படம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நேரம்
இந்த டைம் ரிலீஸ் பண்ணியிருக்க கூடாது மேடம் என்று ரசிகர் ஒருவர் வருத்தப்பட்டுள்ளார்.

சரத்குமார்
சென்னையில் ஒரு நாள் படம் நன்றாக இருந்தது. சரத்குமார், சேரன் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் பேசப்பட்டது. இரண்டாவது பாகம் துருவங்கள் 16 போன்று எடுக்க முயன்று சறுக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











