செக் மோசடி வழக்கில் இசை அமைப்பாளர் சுந்தர்.சி.பாபு நெல்லை கோர்ட்டில் ஆஜர்
நெல்லை: செக் மோசடி வழக்கில் இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அஞ்சாதே, நாடோடி ஆகிய திடைப்படங்களுக்கு இசை அமைத்தவர் சென்னையை சேர்ந்தவர் சுந்தர் சி.பாபு. இசைக்கருவிகள் வாங்குவதற்காக பாளையங்கோட்டையை சேர்ந்த டாக்டர் சுதாகர் என்பவரிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
அந்த கடனில் ரூ.ஏழரை லட்சத்தை திருப்பி கொடுப்பதற்காக சுந்தர் சி.பாபு காசோலை கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த செக்கை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது.
இதையடுத்து செக் மோசடி செய்து விட்டதாக சுந்தர் சி.பாபு மீது டாக்டர் சுதாகர் நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுந்தர்.சி.பாபு ஆஜரானார். வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











