»   »  கற்பழிப்பு-சேரன், தங்கரிடம் மீண்டும் விசாரணை?

கற்பழிப்பு-சேரன், தங்கரிடம் மீண்டும் விசாரணை?

Subscribe to Oneindia Tamil
திருச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணை குளிர்பானம் கொடுத்து கற்பழித்தது தொடர்பாகதொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் சேரனிடம் போலீஸார் மீண்டும் விசாரணைநடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ரகமதுன்னிஷா. இவர் கடந்த 2004ம் ஆண்டு உறையூர்போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னை எனது குடும்பத்தினர்விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். திருச்சியில் சினிமா விழாவில் கலந்துகொள்வதற்காக வந்த இயக்குனர் சேரனிடம் என்னை அனுப்பினார்கள்.

என்னைப் பார்த்த சேரன், சினிமாவில் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். பின்னர்குளிர்பானத்தைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அதன் பின்னர் நான்மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னர் விழித்தெழுந்தபோதுதான் அவர் என்னைக்கற்பழித்தது தெரிய வந்தது.

அதன் பின்னர் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா கட்டியிருப்பதைப் போல தமிழ்எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சேலையை எனக்குப் பரிசாக சேரன் கொடுத்தார்.

அதன் பின்னர் சிலர் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று இயக்குனர்தங்கர்பச்சானிடம் அறிமுகப்படுத்தினர். அங்கு அவரும் என்னைக் கற்பழித்துவிட்டார் என்று தனது புகாரில் ரகமதுன்னிஷா கூறியிருந்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் புகாரை பதிவு செய்த போலீஸார்,ரகமதுன்னிஷாவின் தாயார், சகோதரர் மற்றும் நண்பர்களைக் கைது செய்தனர். இதுதொடர்பாக திருச்சி 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போலீசார்சேரன், தங்கர்பச்சானிடம் விசாரணையும் நடத்தினர்.

ஆனால், சேரன், தங்கர் மீதான புகாரில் உண்மையில்லை என்று கூறிய போலீசார்அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை.

சில காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு தற்போது மீண்டும் தூசி தட்டிஎடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வாக்குமூலம் அளிக்குமாறு ரகமதுன்னிஷாவுக்குதிருச்சி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜரான ரகமதுன்னிஷா, ரகசிய வாக்குமூலம்கொடுத்துள்ளார். கடந்த 20ம் தேதி இந்த வாக்குமூலத்தை ரகமதுன்னிஷா கொடுத்தார்.

அப்போது சேரன், தங்கர்பச்சான் மீதான தனது புகார்களை உறுதி செய்து கூறியதுடன்,அதற்கான ஆதாரங்களையும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் போலீஸார் மீண்டும் விசாரணைநிடத்தக் கூடும் எனத் தெரிகிறது. இதனால் திரையுலகில் மீண்டும் பரபரப்புஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி தற்போது மதுரையில் உள்ள தனியார் தொண்டு அமைப்பின்பராமரிப்பில் இருக்கிறார் ரகமதுன்னிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil