பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் காட்சியில் சேரனுக்கும் பார்த்திபனுக்கும் வெடித்த மோதல்!

சென்னை: இயக்குனர் சேரன் என்றாலே குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் தரமான படங்களை மட்டுமே எடுப்பார்

குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றி படங்களை கொடுத்த சேரன் 1997 ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

காதலை மிக வித்தியாசமான கோணத்தில் கூறிய பாரதி கண்ணம்மா மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சேரனுக்கும் பார்த்திபனுக்கு மிகப் பெரிய மோதல் ஏற்பட்டதாக சேரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

காதலை மிக வித்தியாசமாக

காதலை மிக வித்தியாசமாக

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சேரன் பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஹீரோவாக பார்த்திபன் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக மீனாவும் நடித்திருப்பார் . காதலை மிக வித்தியாசமாக கூறிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது.

காதலை பிரிக்கும் ஜாதி

காதலை பிரிக்கும் ஜாதி

சேரனுக்கு அறிமுக படமாகவே இருந்தாலும் முதல் படத்திலேயே அழுத்தமான கதையை கையில் எடுத்த சேரன் வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பதித்தார். தயாரிப்பாளர் ஹென்றி இப்படத்தை தயாரித்திருப்பார். இரு வேறு ஜாதி பிரிவை சேர்ந்தவர்கள் காதலிக்கும் பொழுது ஜாதி என்ற பெயரில் காதல் மீது மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்படுகிறது அதையும் தாண்டி எவ்வாறு இருவரும் போராடுகிறார்கள் என்பதே படத்தின் கதையாக அமைந்தது.

ஹீரோயின் தியாகம் செய்வது

ஹீரோயின் தியாகம் செய்வது

பொதுவாக காதல் படங்கள் என்றாலே ஹீரோ தான் தியாகம் செய்வார் ஆனால் இந்த படத்தில் ஹீரோயின் தியாகம் செய்வது போல கிளைமேக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கிளைமாக்ஸ் மிக வித்தியாசமாக இருந்ததாலேயே இப்படத்தில் பார்த்திபன் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.

இருவருக்கும் மோதல்

இருவருக்கும் மோதல்

இந்நிலையில் பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும்பொழுது சேரனுக்கும் பார்த்திபனுக்கும் கிளைமேக்ஸ் காட்சி எடுப்பதில் மோதல் வெடித்ததாக சேரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் காட்சிக்காக தான் பார்த்திபன் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். ஆனால் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது தனக்கு பிடிக்கவில்லை என திடீரென மாற்ற சொன்னதால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார்

கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார்

ஆனால் சேரன் பிடிவாதமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் ஹென்றியும் பார்த்திபன் சொல்வதும் சரி என தோன்றுகிறது என்று கூறி கிளைமாக்ஸ் காட்சியை மாற்ற சொன்னார். நான் பிடிவாதமாக என்னுடைய கிளைமாக்ஸில் தான் படத்தை எடுத்தேன். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. பார்த்திபனுக்கும் சேரனுக்கும் இடையே பாரதி கண்ணம்மா பட கிளைமாக்ஸ் நடித்த மோதல் குறித்து சேரன் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X