கண்ட மேனிக்கு திட்டி எழுதிய லக்ஷ்மி நாராயணன்.. சேரனின் ரியாக்ஷன பாருங்க!

சென்னை: தன்னை திட்டி டிவிட்டிய லக்ஷ்மி நாராயணனுக்கு அவரே வெட்கப்படும்படியான பதிலை அளித்திருக்கிறார் இயக்குநர் சேரன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இயக்குநர் சேரன் ஏராளமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் கவின் லாஸ்லியா காதல் விவகாரத்தில் தலையிட்டதால் கவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சேரனை தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர்.

இதனால் நொந்து போன சேரன் இனி கவின், லாஸ்லியா பெயரை என் நாக்கு உச்சரிக்காது. கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் என் பிரச்சனைக்கு வரவேண்டாம் என்று கூறினார். ஆனாலும் அவர் மீதான விமர்சனங்களை அவர்களின் ரசிகர்கள் கைவிடவில்லை.

லக்ஷ்மி நாராயணன்

லக்ஷ்மி நாராயணன்

சேரன் அப்படி ஒரு டிவிட் போட்டப் பிறகும் கூட கவினோ லாஸ்லியாவோ தங்களின் ரசிகர்களை கண்டிக்கவில்லை. இந்நிலையில் லக்ஷ்மி நாராயணன் என்பவர் சேரன் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நானே பொறுப்பு

அதாவது சேரன் எனும் மாமனிதர்? என்று கேள்வி குறியோடு தொடங்கிய அவர், தான் சேரன் குறித்து எழுவது பல ஆண்டுகளாக அவரைப் பற்றிய எனது அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டது, இயக்குனருக்கு எதிராக ஏதேனும் கடுமையான வார்த்தைகள் இருந்தால், அதற்கு நான் மட்டும்தான் காரணம். லாஸ்லியாவோ கவினோ அல்லது அவர்களின் ரசிகர்களோ அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

மூன்று குறைகள்

தொடர்ந்து டிவிட்டிய அவர், அவருடைய சர்ச்சைக்குரிய பயணம், அவரின் பிரபலமான தனிப்பட்ட தாக்குதல் உரைகளால்தான் என தெரிவித்துள்ளார். மேலும் சேரன் ஒரு சிறந்த படைப்பாளி, ஒரு இயக்குநராக அவரது படைப்புகள் காலத்தைத் தாண்டி கற்பனை செய்ய முடியாதவை. இந்த அவார்டு வின்னிங் திறமையால் எங்களுக்கு பிரச்சினை என்ன? நான் மூன்று பிரச்சனைகளை கண்டேன் 1) சத்தியம் மற்றும் விசுவாசம் இல்லாமை. 2) பாகுபாடு & 3) இளைஞர்களுடன் ஒத்துபோகாதது என பதிவிட்டிருக்கிறார்.

பாராட்டிய ரஜினி

மேலும், அவருடைய மற்ற எல்லா பிரச்சனைகளுக்கும் இவை முக்கிய மூல காரணம், முந்தைய குறிப்புகளை தற்போதைய சம்பவங்களுடன் ஒப்பிடுவோம். அவர் பொற்காலம் என்ற திருப்புமுனை திரைப்படத்தை கொடுத்தார், அதற்காக ரஜினி தனிப்பட்ட முறையில் அவரை வாழ்த்தினார். சேரன் தனது அனைத்து திரைப்படங்களுக்கும் ரஜினி கடிதங்களை விளம்பரங்கள் மற்றும் வணிக நலன்களுக்காக பயன்படுத்தினார்.

நாங்கள் அறிவோம்

ஆனால் பின்னர் அவர் மீதும் கமல் மீதும் விஷத்தைத் கக்க ஆரம்பித்தார். அவர் ரஜினியை கேலி செய்தார், எனவே நல்ல உறவைப் பேணிய ஒருவருக்கு நம்பிக்கையும் விசுவாசமும் எந்த நேரத்திலும் அவருடன் இருந்ததில்லை. 2) அவர் தனது மகள் உறவை கையாண்ட விதத்தில் அவரது தனிப்பட்ட கதையை நாங்கள் அறிவோம்

மறைக்கப்பட்டுள்ளது

யூடியூப்பில் அவரது பல உரைகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவர் தன்னை உயர்ந்த தரத்தில் உணர்கிறார் என்பதை அறிந்து கொண்டேன், "பாகுபாடு" அடங்கிய அடர்த்தியான முகமூடி சாதி அல்ல, ஆனால் அது சாதி மற்றும் செல்வந்தர்களால் கலந்ததாகும். அவர் தனது வீட்டிற்கு சாக்ஷி & ஷெரின் ஆகியோரை அழைத்தார், மது வீட்டிற்கு அவர் சென்றார்! இங்கே நிறைய மறைக்கப்பட்டுள்ளது! என்று பதிவிட்டுள்ளார்.

பழிவாங்கினார்

தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தல், புரொடியூசர் கவுன்சில் தேர்தல், ஆர்கே நகர் தேர்தல் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது நமக்கு தெரியும். அவர் கார்த்தி விஷால் அணிக்கு எதிரானவர். விஷாலும் கார்த்தியும் அவருக்கு கால்ஷீட் கொடுக்காததால் அவர் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியும் அவர்களின் நடிப்பை கிண்டல் செய்தும் பழிவாங்கினார். இவ்வாறு சேரனுக்கு எதிராக பல விஷயங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

சந்தோசம் கொள்வேன்

இதனை பார்த்த சேரன், அவருக்கு நச்சென பதில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, திரு.லஷ்மிநாராயணன்... இன்று நீங்கள் என்னைப்பற்றி எழுதிய பெருமிதத்தில் நிம்மதியாக தூங்கிவிட்டதாக உணர்ந்தீர்களானால் நீங்கள் என்னை தினமும் திட்டி எழுதலாம்.. சந்தோசம் கொள்வேன்.. மகிழ்ச்சி.. என தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X