விஜய் சேதுபதி இன்னொரு சிவாஜியாம்: சேரன் சொல்வது சரியா?
Recommended Video

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த சேரன் விஜய் சேதுபதியை சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டுள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். படத்தை பார்த்து கழுவிக் கழுவி ஊத்துபவர்கள் ஊத்துகிறார்கள், பாராட்டுபவர்கள் பாராட்டுகிறார்கள்.
இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த இயக்குநரும், நடிகருமான சேரன் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
சேரன்
வாழ்க்கை பற்றி சாமி பற்றி எது நல்லது எது கெட்டது யார் நல்லவர் யார் கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதை தான் படமும் கேட்கிறது. உள்ளூர ஆயிரம் வக்கிரமங்களை அடக்கி வைத்திருக்கும் நம்முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச் சுற்றி ஓடவில்லை நம்முள்தான் ஓடுகிறது. சூப்பர் டீலக்ஸ்.
சிவாஜி கணேசன்
இமேஜ் பற்றி கவலைப்படாமல் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி இன்னொரு சிவாஜி கணேசன் என்று தெரிவித்துள்ளார் சேரன்.
அதிகம் வரும்
ஆபாச வார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ள முடியாத சினிமா தான் சூப்பர் டீலக்ஸ். காட்சி வடிவமைப்பு, ஒளிப்பதிவு, தேர்ந்தெடுத்த லொகேசன்கள் நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும் என இயக்குநரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது.. அடுத்த 5வருடங்களில் இதுபோல சினிமாக்கள் அதிகம் வரும்.
எதிர்பார்க்கவில்லை
சேரனின் ட்வீட்டை பார்த்த ஒருவர் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்றார். அதற்கு சேரன் இப்படி ஒரு பதில் அளித்துள்ளார்.
பாராட்டு
சேரன் விஜய் சேதுபதியை சிவாஜியுடன் ஒப்பிட்டதை பார்த்த நெட்டிசன் ஒருவர் அவரை கலாய்த்தார். அதற்கும் பொறுமையாக பதில் அளித்துள்ளார் சேரன்.


Click it and Unblock the Notifications











