Bigg Boss 3 Tamil: அழகி-ஆட்டோகிராப் படங்களுக்கு இடையே எத்தனை வித்தியாசம்?
Recommended Video
சென்னை: இயக்குநர் சேரன் இப்போது பிக்பாஸ் ஹவுஸ் மேட் ஆக ,பிக்பாஸ் இல்லத்தில் இருக்கிறார். இது அவரது சினிமா உலக நண்பர்கள் மட்டுமல்ல, மக்களே கூட எதிர்பார்க்காத ஒன்றுதான்.
தன்னை எந்த மாதிரி இயக்குநராகவும் முத்திரை குத்த முடியாதபடி படம் எடுக்கும் சேரனும், இலக்கிய தரம், தராதரம் பார்த்து, சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை வைத்து படம் எடுப்பவர் தங்கர் பச்சானும் வெவேறு பாதையில்பயணிப்பவர்கள்.
இயக்குநர்கள் சேரனும், தங்கர் பச்சானும் நண்பர்கள். நல்ல தரமானப் படங்களை எடுத்துவிட்டு, அது நன்றாக போகாத பட்சத்தில் தங்கர் பச்சானுக்கு ஊடகங்கள் மீதுதான் கோபம் வரும்.

மக்கள் மீது சுமை
இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று நீங்களே ஒரு முடிவு செய்து மக்கள் மீது ஏன் திணிக்கிறீர்கள் என்று பெரும் கோபம் கொள்வார் தங்கர் பச்சான். இயல்பான மனிதர், அதையே தனது படத்திலும் பிரதிபலிக்கும் படி செய்வார் .எந்த காட்சியும் அனாவசியமாக இருந்ததே இல்லை. இவரின் ஒளிப்பதிவில் உருவான பாரதி படம் அனைவரும் ரசித்து பார்த்த படம். இப்படிப்பட்ட பாதையில் பயணிப்பவர்.

பாரதி கண்ணம்மா
இயக்குநர் சேரன் பாரதி கண்ணம்மா படத்தை இயக்கி, அது மாபெரும் வெற்றி அடைந்த போதும், புரட்சி என்கிற முத்திரை தன் மேல் விழாதபடி அடுத்தடுத்து வெல்வேறு விதமான படங்களை மக்களுக்கு கொடுத்து, தரமான படத்தை தரும் நல்ல இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் சேரன். பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி என்று வித்தியாசமான பாதையில்தான் சேரன் பயணித்தார்.

தங்கர் பச்சான் அழகி
இயக்குநர் தங்கர் பச்சான் அழகி படத்தின் மூலம் பெரும் தாக்கத்தையே மக்கள் மனதில் உருவாக்கினார். எல்லாருமே தங்களது பள்ளி காலத்துக்கு சென்று பயணித்து, நிகழ்காலத்துக்கு வந்து பெரு மூச்சு விட்டுக்கொண்டது என்னவோ உண்மைதான். பட்டித் தொட்டி எங்கும் மக்கள் அந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தார்கள். இப்படி ஒரு படம் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப ரொம்ப புதுசுதான்.

ஆட்டோகிராப் சேரன்
அழகியின் வெற்றிக்குப் பிறகு சில மாதங்களில் வெளிவந்த படம் ஆட்டோகிராப். இந்த படத்தின் இன்ஸபிரேஷன் அழகி படம்தான் என்று மக்களுக்கு தெரிந்தும் கூட, ஆட்டோகிராப் படத்துக்கும் மக்கள் அமோக ஆதரவு தந்தார்கள். ஆனால், தங்கர் பச்சன் நண்பர், அவரது படத்தில் கூட சேரன் நாயகனாக நடித்து இருக்கார். என்றாலும் கூட ஒரு நேர்காணலிலும் சேரன் இதை சொன்ன மாதிரி தெரியவில்லை.

படிப்பபடியான பருவம்
அழகி படத்துக்கும், ஆட்டோகிராப் படத்துக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை.அழகியை பள்ளிப் பருவ கால நட்பு காதலை மட்டுமே கையில் எடுத்து இருந்தார் தங்கர். பள்ளிப்பருவம் மட்டுமின்றி, கல்லூரி, வேலை பார்க்கும் இடம் என்று கூட இரண்டு பருவ காலங்களைக் கையில் எடுத்து, கடைசியாக இதில் கொஞ்சமும் தொடர்பில்லாத வேறு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்படுவதை காண்பித்து இருந்தார் சேரன்.

ஊடகங்களும் சேரனும்
இந்த ஒற்றுமை வேற்றுமையை எந்த ஊடகங்களும் சொல்லவில்லை. எந்த பத்திரிகையிலும் எழுதவில்லை. சேரனும் வாய் திறக்கவில்லை, தங்கரும் பெரிது படுத்தவில்லை. இப்போது சேரன் வசமும் படங்களில், தங்கர் வசமும் படம் இல்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் உலக நாயகன் கமல்ஹாசன், திரும்ப வரும்போது சேரன் ஒரு கதையுடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறினார். படைப்பாளியாக பிக்பாஸ் வீட்டினுள் ஹவுஸ் மேடாக சென்று இருக்கும் சேரன், படைப்பாளியாக ஒரு கதையுடன் திரும்பி வருவாரா? இல்லை பணம் மட்டுமே தேவை என்று நாட்களை கழித்து விட்டு வருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











