ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் மொத்த உறவுகளையும் அறிமுகப்படுத்திய இயக்குனர் சேரன்!

சென்னை : கூட்டுக் குடும்ப கதை களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

இயக்குனராகவும் நடிகராகவும் உள்ள சேரன் தற்பொழுது ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கியிருக்கும் நிலையில் மிகப்பெரிய திரைப்பட்டாளங்களுடன் உருவாகி வரும் இந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் மொத்த உறவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குனர் சேரன்.

ராஜாவுக்கு செக்

ராஜாவுக்கு செக்

தமிழ் சினிமாவிற்கு பல வெள்ளிவிழா திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சேரன் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தான் இயக்கும் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ள இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜாவுக்கு செக் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இன்றும் சேரனின் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்க மீண்டும் குடும்ப கதைகளை கொண்ட படங்களை இயக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மிக விரைவிலேயே இயக்கும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நந்தா பெரியசாமி

நந்தா பெரியசாமி

இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான மாயாண்டி குடும்பத்தார் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு பிளாக்பஸ்டர் வெற்றியும் பெற்றது. அதைத் தொடர்ந்து மாயாண்டி குடும்பத்தார் பாகம்2 உருவாகிறது எனவும் இதனை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்குகிறார் எனவும் சொல்லப்பட்டது.

கூட்டுக் குடும்பத்தை

கூட்டுக் குடும்பத்தை

இந்நிலையில் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற டைட்டில் இதற்கு வைக்கப்பட்டு இதில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். கூட்டுக்குடும்பத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் இயக்குனர் சேரன், நடிகர் சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட மிகப் பெரிய பட்டாளமே இதில் நடிக்கின்றனர்.

பூரித்து பதிவிட்டுள்ளார்

பூரித்து பதிவிட்டுள்ளார்

படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து வரும் சேரன் தன்னுடன் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடிக்கும் மொத்த உறவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது "தம்பிகளாக செளந்தர்ராஜா, செல்லா, முனீஸ்ராஜ்.. என் மனைவியாக சூசன் மற்றும் தம்பி மனைவிகளாக ஜானகி, சிந்து, சுபா, அம்மாவாக தனம் அம்மாள் மற்றும் கெளரவ தோற்றத்தில் மொட்டைராஜேந்திரன், மதுமிதா இவர்களோடு ஒரு குடும்பமாக நடிப்பதில் பெருமை கொள்கிறேன். அனைவரும் பழகுவதற்கு இனிமையானவர்கள்". இவ்வாறு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் பூரித்து பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: cheran சேரன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X