ஓடியாங்க… ஓடியாங்க… சேரனை பாருங்க… கோட் சூட்டில் என்னமா இருக்காரு!

சென்னை : இயக்குனர் சேரன் புது அவதாரத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Anandham Vilayadum Veedu | Cheran நடிக்கணுமா - இதான் கண்டிஷன் | Filmibeat Tamil

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாவ்... வாட்ஏ மேன் என கூறி வருகின்றனர்.

சேரனின் இந்த படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள இயக்குநர் விஜய் மில்டன், சேரனுடனான எனது அடுத்த ஒத்துழைப்பு என பகிர்ந்துள்ளார்.

உதவியாளராக

உதவியாளராக

தமிழ் சினிமாவில் யதார்த்தமான உயிரோட்டமிக்க திரைப்படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் என்றென்றும் மறக்க முடியாத இடத்தைப் பெற்று இருப்பவர் இயக்குநர் சேரன். கே.எஸ்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகமான புரியாத புதிர் படத்திலிருந்து அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார்.

பல படங்களில்

பல படங்களில்

அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன், நாட்டாமை படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி திரைப்படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

இயக்குனராக

இயக்குனராக

உதவி இயக்குநராக இருந்த சேரன் பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். பார்த்திபன் மற்றும் மீனா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி என அடுத்தடுத்து படங்களை இயக்கி பெயர் எடுத்தார்.

ஹீரோவாக

ஹீரோவாக

திரைக்குப் பின்னால் மட்டுமே மின்னின்கொண்டு இருந்த சேரன் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான சொல்லமறந்த கதை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து, ஆட்டோகிராப், பொக்கிஷம், பிரிவோம் சந்திப்போம், ராமன் தேடிய சீதை என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனந்தம் விளையாடும் வீடு

ஆனந்தம் விளையாடும் வீடு

நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சேரன் தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மாஸ் போட்டோ

மாஸ் போட்டோ

இந்நிலையில், சேரன் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புது போட்டோஷூட் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் , கோட் மற்றும் ஷூட் போட்டுக்கொண்டு , தலையில் கொண்டையுடன் ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு மாஸ் காட்டி உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X