twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் முரளி என்னை அப்படிதான் அழைப்பார்.. ரொம்ப மிஸ் பண்றோம்.. இயக்குநர் சேரன் உருக்கம்!

    |

    நடிகர் முரளி கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர். அவரது தந்தை சித்தலிங்கைய்யா கன்னட சினிமாவின் பிரபல இயக்குநர் ஆவர்.

    Recommended Video

    Chennai 28 unexpected ReUnion | Simbhu Upcoming Movie | Pa. Ranjith Tweet

    கன்னட படங்களின் மூலம் திரைத்துறைக்கு நடிகராக அறிமுகமான முரளி பூ விலங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார். தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகர் முரளி.

    காப்பாத்துங்க.. ஆப்ரிக்காவுக்கு ஷூட்டிங் போன 70 பேர்.. பெண்கள், குழந்தைகளுடன் சிக்கித் தவிப்புகாப்பாத்துங்க.. ஆப்ரிக்காவுக்கு ஷூட்டிங் போன 70 பேர்.. பெண்கள், குழந்தைகளுடன் சிக்கித் தவிப்பு

    அகால மரணம்

    அகால மரணம்

    ரசிகர்களால் புரட்சி நாயகன் என்ற அழைக்கப்பட்ட முரளி தனது மகன் அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்தார். அதுவே அவரது கடைசி படமாகும். முரளி தனது 100வது படமான கவசம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அதற்குள் அவர் அகால மரணமடைந்ததால் அந்தப்படம் டிராப்பாகிவிட்டது.

    நேற்று பிறந்தநாள்

    நேற்று பிறந்தநாள்

    நடிகர் முரளி கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி திடீர் மாரடைப்பால் அகால மரணமடைந்தார். நடிகர் முரளி இறக்கும் போது அவருக்கு வயது 46. அவரது திடீர் மரணம் தமிழ் திரைத்துறையை உலுக்கியது. இந்நிலையில் நடிகர் முரளியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

    ரொம்ப மிஸ் பண்றோம்

    ரொம்ப மிஸ் பண்றோம்

    இதனை முன்னிட்டு இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார். அதில், நாங்கள் உங்களை மிஸ் பண்றோம் சார்.. பிறந்த நாள் வாழ்த்துகள் மை டியர் சார்.. உங்க சிரிப்பும் உங்க அன்பும் ரொம்ப மிஸ் பண்றோம் சார் என பதிவிட்டுள்ளார். மேலும் உங்களுடைய பாஸ்.. என குறிப்பிட்டுள்ள இயக்குநர் சேரன், என்னை அவர் பாஸ் பாஸ் என்றுதான் அழைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

    பொற்காலம் மாணிக்கம்

    பொற்காலம் மாணிக்கம்

    இயக்குநர் சேரனின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு நேர்காணலில் அவர் உங்களை அன்பாக பாஸ் என்று அழைப்பார் என்று சொன்னீர்கள் அப்பா. அவர் நம்மை விட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் இதயம் ராஜா... பொற்காலம் மாணிக்கம்... இது போன்ற கதாபாத்திரங்கள் மூலம் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்... அவரை தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு கூட... என பதிவிட்டுள்ளார்.

    பெரும் பாராட்டு

    பெரும் பாராட்டு

    மறைந்த நடிகர் முரளி, சேரன் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளார். தேசிய கீதம், பொற்காலம் மற்றும் வெற்றி கொடிக்கட்டு படங்கள் ஆகும். பொற்காலம் படத்தில் அவரது மண்பானை செய்யும் குயவராகவும் அன்பான அண்ணனாகவும் நடித்து ரசிகர்களை கலங்க செய்திருப்பார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றுள்ளார்.

    English summary
    Director Cheran shares about late actor Murali. Cheran reveals that Actor Murali calls him as Boss. Cheran Missing Murali's smile and love.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X