ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாய் ‘’ஜெய் பீம்’’… சேரன் பாராட்டு !

சென்னை : ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாய் ஜெய்பீம் இருக்கிறது என்று சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெய் பீம்.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த பலரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஜெய் பீம்

ஜெய் பீம்

சூர்யாவின் 39வது திரைப்படமான ஜெய் பீம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி உள்ளார். ரஜிதா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

ஒரு உண்மை சம்பம்

ஒரு உண்மை சம்பம்

ஜெய்பீம் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, 1993ம் ஆண்டு, ஒரு பழங்குடி இன பெண்ணுக்காக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெய் பீம் சேரன் பாராட்டு

ஜெய் பீம் சேரன் பாராட்டு

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு சேரன் தனது ட்விட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாய் ஜெய்பீம் , இதுபோன்ற சினிமாக்கள் வந்துகொண்டே இருக்கவேண்டும். முயற்சிக்கும் ஆக்கத்திற்கும் இயக்குனர் த.செ.ஞானவேல் மற்றும் குழுவினற்கு வாழ்த்துக்கள். என்று பதிவிட்டுள்ளார்.

கண்கள் குளமானது

கண்கள் குளமானது

ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்த கமல் ஹாசன் முதல் ஆளாக ஜெய் பீம் திரைப்படத்தை பாராட்டினார். ஜெய் பீம் பார்த்தேன் . கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஞானவேல் , பொதுசமூகத்தின் மனச்சாட்சிக்கு குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டு என்று கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X