குண்டு படத்திற்குக் குவியும் பாராட்டுகள்.. சேரன் பாராட்டு!

சென்னை : டிசம்பர் 6 வெளியாகிய குண்டு படம் மக்களிடத்திலும் விமர்சகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .படம் சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளை கேள்விகளாய் எழுப்பி உள்ளது .குண்டு படத்தை அறிமுக இயக்குனரான அதியன் ஆதிரை இயக்கியிருந்தார்.படத்தை நீலம் புரடக்ஸன் சார்பில் இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்து இருந்தார்.

படத்தில் தினேஷ் ,ஆனந்தி,முனீஸ்காந்த்,ரித்விகா,ரமேஷ் திலக்,ஜான் விஜய் ,லீஜேஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.போர் காலங்களில் கைவிட பட்ட குண்டுகள் வங்காள விரிகுடாவில் கொட்டப்படுகின்றன.

cheran praises irandam ulaga porin kadaisi gundu team

அது அலைகளினால் கரை ஒதுங்க அது என்னவென்று தெரிந்து அதை மறைக்க திட்டமிடும் ஒரு கும்பல் அது என்னவென்று தெரிந்து அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட நினைக்கும் சமூக ஆர்வலர்கள் அதை என்னவென்றே தெரியாமல் அதனுடனே பயனிக்கும் தினேஷ் மற்றும் முனீஸ்காந்த் என கதை மிக சுவாரஸ்யமான முறையில் உருவாக்கபட்டிருந்தது .படத்தை பார்த்த பலரும் வெகுவாக பாராட்டிருந்தனர் .

தற்போது பிரபல இயக்குனரான சேரன் அவர்கள் ட்விட்டரில் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் .அதில் சிறந்த படைப்பு...புதிய கோணம்...கதை சொன்ன யுக்தி...எடுத்து கொண்ட களம்...எல்லாமே அருமை... நாம் வரி கட்டி வாழும் நம் நாட்டில் நம்மை சுற்றி நிகழும் அரசியலும் ஆபத்தும் தெரியாமலே வாழும் மக்களில் நாமும் ஒருவராக இருக்கிறோம் என்பதை திரைப்படம் உணர வைக்கிறது என்று உணர்ச்சி மிக கூறியுள்ளார் .

cheran praises irandam ulaga porin kadaisi gundu team

தற்போது சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்துள்ளார் .அதில் கதாநாயகனாக நீண்ட நாடாகளுக்கு பின் நடித்திருக்கிறார் சேரன் .கடைசியாக சேரன் திருமணம் படத்தை இயக்கி இருந்தார் .பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கட்டாயம் வெளியே சென்றவுடன் ஒரு படம் இயக்குவேன் என்று கூறியிருந்தார் அது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் ஏதும் இதுவரை வரவில்லை பொருத்திருந்து பார்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X