Cheran Vs Vijay: உங்களுக்கு என்ன பிரச்னை? பதில் சொல்லுங்க விஜய்.. விளாசிய சேரன்!

சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சேரன். தனது திரைப்படங்கள், மேடைப் பேச்சுக்கள், நடவடிக்கைகள் உள்ளிட்ட பலவற்றாலும் மக்கள் மத்தியில் தனக்கென தனி நன்மதிப்பை உருவாக்கி வைத்துள்ளவர். சேரன் ஒரு விஷயம் குறித்து விவாதிக்கிறார், பேசுகிறார் என்றாலே அது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துவிடுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, சேரன் எல்லாவற்றிற்கும் தனது கருத்தை தெரிவிப்பது இல்லை.

ஆனால் மிக முக்கியமாக அவருக்கு சரி என்று படக்கூடிய அல்லது அவருக்கு இந்த நேரத்தில் நமது கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடிய பல இடங்களில் பல நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் குறித்தும் விஜய்யின் பிரச்சார யுத்தி குறித்தும் சேரன் வெளிப்படுத்தியுள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Cheran Questions Vijay s Campaign Strategy Sparks Debate

விஜய் குறித்து சேரன் பேசுகையில்," புதிதாக கட்சி ஆரம்பித்து ஓட்டு கேட்க வருபவர்கள் மக்கள் மத்தியில் என்ன பிரச்சனை உள்ளது, அதை எப்படி தீர்க்கலாம், அந்த பிரச்சனைகளை தீர்க்க என்னென்ன திட்டங்கள் தன்னிடம் இருக்கிறது என்பது குறித்து பேசினால் சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா நான் வேண்டுமானு கேட்கிற தகுதி மட்டும் நாட்டை ஆள போதுமானதாக இல்லை. உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியவில்லை. அது உங்களின் ரசிகர்களுக்கே தெரியாது என்று நான் நினைக்கின்றேன்.

என்ன கோபம்: அப்படி என்ன திமுக மேல் உங்களுக்கு கோபம் என்று சொல்லுங்கள், உங்கள் கோபத்தில் நியாயம் இருந்தால் நாங்களும் ஆதரவு தருகிறோம் என்று நேரடியாகவே நடிகர் விஜய் நோக்கி காரசாரமான கேள்விகளை முன் வைத்துள்ளார். ஏற்கனவே திரை துறையைச் சார்ந்த சில நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் நடிகர் விஜய் குறித்து குறிப்பாக அவருக்கு எதிரான கருத்துக்களை பேசி வருகிறார்கள். விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்த அனைவருக்கும் எதிராகவே விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாகவே விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.

Cheran Questions Vijay s Campaign Strategy Sparks Debate

பாராட்டு: இதையெல்லாம் விஜய் கண்டிக்காதது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது என்றும் பலர் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள். அப்படி இருந்தும் சேரன் விஜய் குறித்து இவ்வளவு வெளிப்படையாக விஜய்க்கு எதிரான விமர்சனத்தை வைத்தது பலர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் சேரனை மிகவும் மோசமாக ஒருமையிலும் விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: cheran vijay tvk vijay stalin dmk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X