ஜனவரியில் வருது “ராஜாவுக்கு செக்”.. யாருக்கு செக் வைக்கிறார் சேரன்!
சென்னை: சேரனின் ராஜாவுக்கு செக் ஜனவரி 24ல் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இர்ஃபான், ஸ்ருஸ்டிடங்கே,சரயு,நந்தனா வர்மா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சாய் ராஜ்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.
கடைசியாக நாம் சேரனை பார்த்தது பிக்பாஸ் வீட்டில் தான், நேர்மையாக இருந்ததால் கொஞ்ச காலம் அந்த வீட்டில் தாக்குபிடித்தார். சேரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ராஜாவுக்கு செக். படத்தின் முன்னோட்டம் பல நாட்களுக்கு முன்பே வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. யூடியூப்பில் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இதை பார்த்துள்ளனர்.

படத்தின் சுவாரஸ்யமான விசயம் என்னனா, தூக்க வியாதியினால் அவதிப்படும் சேரனுக்கு பல பிரச்சினைகள் ஒரே நேரத்தில் வருகின்ற அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை. இப்படம் ஜனவரி 24 ந்தேதி வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாய் ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு வினோத் யஜமான்யா இசையமைத்துள்ளார். சேரன், இர்ஃபான், ஸ்ருஸ்டிடங்கே, சரயு, நந்தனா வர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
கனா காணும் காலங்கள் இர்ஃபான் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். மூன்று வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த இர்ஃபானுக்கு "ராஜாவுக்கு செக் " பட வாய்ப்பை ஏற்படுத்தித்தருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சேரன் ஒரு மாபெரும் இயக்குநர் மற்றும் நடிகர் இவரின் நடிப்பில் உருவான பிரிவோம் சந்திப்போம் , ராமன் தேடிய சீதை ,யுத்தம் செய் , சென்னையில் ஒரு நாள் ,மூன்று பேர் மூன்று காதல் படங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல பெயரை இவருக்கு பெற்றுத் தந்தது. ஆனால், சேரன் கடைசியாக இயக்கி நடத்த படம் திருமணம், சரியாக மக்களிடம் எடுபடவில்லை. தற்போது அவர் நடிக்கில் வெளியாக இருக்கும் ''ராஜாவுக்கு செக்'' கிலாவது அவருக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











