பொங்கலன்று சேரன் படம்... '50 லட்சம் திரைகளில்' வெளியிடுகிறார்!
இந்தப் பொங்கலுக்கு சேரனின் ஜேகே என்ற நண்பனின் வாழ்க்கை படமும் களமிறங்குகிறது.
‘பாரதி கண்ணமா', ‘பொற்காலம்', 'பாண்டவர் பூமி,' ‘ஆட்டோக்கிராப்', ‘தவமாய் தவமிருந்து' போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் சேரன், இப்போது இயக்கியுளள படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை'.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், சரியான தியேட்டர் கிடைக்காமல், வெளியிட முடியாத சூழலில் சிக்கிக் கொண்டது.
இந்நிலையில், சேரன் புதுமுயற்சியாக ‘சி2எச்' (C2H) சினிமா டு ஹோம் என்ற திட்டத்தை தொடங்கி, அதன்மூலம், புதிய திரைப்படங்களை நேரடியாக டிவிடி மூலம் வீடுகளுக்கே கொண்டு செல்லும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
சமீபகாலமாக இந்த திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்த சேரன், வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி தனது ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தை சி2எச் திட்டத்தின் மூலம் வெளியிடவுள்ளார்.

உலகமெங்கும் இப்படத்தின் டிவிடிகள் 50 லட்சம் விற்பனையாகும் என்றும், அதன்மூலம் 50 லட்சம் குடும்பங்கள் இத்திரைப்படத்தை கண்டுகளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறார் சேரன்.
தயாரிப்பாளர்களே தங்கள் படங்களின் ஒரிஜினல் டிவிடிக்களை தயாரித்து கொடுத்தால், திருட்டு விசிடிக்கள் ஒழியவும் வாய்ப்பிருக்கிறது என்று கமல்ஹாஸன் பல காலம் கூறி வருவதை சேரன் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











