»   »  சிவாஜி கணேசனுக்கு சேரனின் ஸ்பெஷல் பாடல்: அரசுக்கும் மெசேஜ் இருக்கோ?

சிவாஜி கணேசனுக்கு சேரனின் ஸ்பெஷல் பாடல்: அரசுக்கும் மெசேஜ் இருக்கோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளான இன்று அவரை போற்றும் விதமாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகரும், இயக்குனருமான சேரன்.

தனது நடிப்பால் ஹாலிவுட் ஜாம்பவான்களை எல்லாம் மிரள வைத்தவர் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமா உள்ள வரை சிவாஜியின் பெயரும் நிலைத்து நிற்கும். அத்தகைய நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று.

நடிகனாகும் ஆசையில் கோடம்பாக்கம் வரும் அனைவருமே இயக்குனரிடம் நடித்துக் காண்பிப்பது சிவாஜி கணேசனின் படக் காட்சிகளை தான். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சிவாஜி.

சிவாஜியின் நினைவு நாளான இன்று அவரை கவுரவிக்கும் விதமாக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகரும், இயக்குனருமான சேரன்.

பாடலின் துவக்கத்தில் சிவாஜி பேசும் வசனம் தற்போது தமிழகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை இடித்துரைப்பது போல உள்ளது.

English summary
Director cum actor Cheran has released a specail song as a tribute to Sivaji Ganesan on his death anniversary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil