ஐ லவ் யு சேரப்பா.. ரசிகை போட்ட டிவிட்.. உருகிய சேரன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Recommended Video

Cheran Blast : அதிர்ச்சியில் இருந்து மீளாத சேரன் -வீடியோ

சென்னை: ஐ லவ் யு சேரப்பா என்று உருகிய ரசிகைக்கு இயக்குநர் சேரன் நெகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளார்.

காலத்தால் அழிக்க முடியாக காவியங்களை கொடுத்திருப்பவர் இயக்குநர் சேரன். தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவரான சேரன், தனது படைப்புகளுக்காக 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

மக்கள் மனதில் இடம்

மக்கள் மனதில் இடம்

கவினை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் சேரனை பாராட்டியும் அவரின் மனிதத்தை வாழ்த்தியும் கருத்து தெரிவித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் ஸ்ட்ராங்காக சப்பளம் போட்டு உட்காந்துவிட்டார் சேரன்.

சேரப்பாவான சேரன்

சேரப்பாவான சேரன்

பிக்பாஸ் வீட்டில் அறிமுகமான லாஸ்லியா, சேரன் தனது அப்பாவை போல் இருப்பதால் சேரப்பா சேரப்பா என்று அழைக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து இளசுகள் பலரும் சேரனை, சேரப்பா என்றே அழைத்து வருகின்றனர்.

ரசிகையின் பதிவு

ரசிகையின் பதிவு

இந்நிலையில் ரசிகை ஒருவர் சேரனுக்கு டிவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் வாழ்க்கையின் ஒவ்வொரு நடைப்பயணத்திலும் வெற்றி உங்களுடன் இருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

சேரப்பா ஐ லவ் யு

உங்கள் மனதில் உள்ள அனைத்து கனவுகளும் நனவாகட்டும், மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு மகிழ்ச்சியையும் சிறந்ததையும் அளிக்கட்டும். நான் உங்களை சிறப்பானவராக உணரச்செய்யவில்லை. ஆனால் நீங்கள் சிறப்பானவர் என்பதை உங்களுக்கே நினைவூட்டுகிறேன்.. சேரப்பா ஐ லவ் யு.. என பதிவிட்டுள்ளார்.

ஓடி உழைக்க தெம்பு தரும்

தனது ரசிகையின் இந்த டிவிட்டை பார்த்த சேரன், உருகிப்போய் நெகிழ்ச்சியுடன் ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நன்றிம்மா.. உன்னப்போன்ற மகள்கள் காட்டும் அன்புதான் தந்தையை கடைசி காலம்வரை ஓடி உழைக்க தெம்பு தரும்.. அது உச்சம் தொடும் நம்பிக்கையும் தரும்.. என தெரிவித்திருக்கிறார் சேரன்.

சந்தேகப்பட்ட லாஸ்லியா

சந்தேகப்பட்ட லாஸ்லியா

தனது மகள்கள் மீது மிகுந்த பாசம் கொண்ட சேரன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியாவையும் தனது மகளாகவே பாவித்தார். ஆனால் கவின் மீது கொண்ட காதலால் அவரது பேச்சைக் கேட்டு சேரனை சந்தேகப்பட்டார் லாஸ்லியா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X