சொல்ல மறந்த கதை படத்துல நடிச்சது ஏன் தெரியுமா.. ரசிகையிடம் சீக்ரெட்டை சொன்ன சேரன்!

Recommended Video

Bigg Boss Cheran tweets about solla marandha kadhai | சொல்ல மறந்த கதைல நடிச்சது ஏன்? சேரன் பதில்

சொல்ல மறந்த கதை படம் 2002ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸானது. இந்தப்படத்தை இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியிருந்தார். இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் லீடிங் ரோலில் இயக்குநர் சேரன் நடித்திருந்தார். பணக்கார வீட்டில் மாப்பிள்ளையாகும் ஒரு ஆண் சந்திக்கும் அவமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சொல்ல மறந்த கதை.

மனம் திறந்த சேரன்

மனம் திறந்த சேரன்

இந்நிலையில் சொல்ல மறந்த கதை படம் ரிலீஸாகி 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படம் குறித்து பாராட்டு தெரிவித்த ரசிகை ஒருவரிடம் மனம் திறந்து டிவிட்டர் வாயிலாக பேசியிருக்கிறார் இயக்குநர் சேரன்.

அற்புதமான திரைப்படம்

டாக்டர் தீபிகா என்பவர் சொல்ல மறந்தகதையின் 17 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அந்த படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த அற்புதமான திரைப்படத்திற்காக இயக்குநர் சேரன் மற்றும் அவரது குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் என கூறியுள்ளார்.

முதல் காரணம்

முதல் காரணம்

இதனை பார்த்த சேரன், சொல்ல மறந்த கதை,
இயக்குனரான என்னை நம்பிக்கை தந்து நடிகனாக மாற்றிய திரைப்படம் என தெரிவித்திருக்கிறார். நடிக்க ஒத்துக்கொண்டதன் முதல் காரணம் கதைதான் என்று கூறியுள்ள அவர், இச்சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் நடக்கும் கதை என தெரிவித்திருக்கிறார்.

தங்கர்பச்சானுக்கு நன்றி

சொல்ல மறந்த கதையில் நிறைய ஆண்களின் பிரதிநிதியாக சிவதாணு பாத்திரம் என்று கூறியுள்ள அவர், தன்னை நடிகனாக்கிய தங்கர்பச்சனுக்கும் ரசிகை தீபிகாவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சேரன்.

சொல்ல நினைக்கும் கதைகள்

இதனை பார்த்த ரசிகர்கள் சேரனின் படைப்புகளை பாராட்டி டிவிட்டி வருகின்றனர். நாங்கள் சொல்லநினைக்கும் கதைகளை .... நீங்கள் சொல்ல மறந்த கதைகளாக சொல்லிடீங்க சேரன்சார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X