twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேப்பர், பால் போல வீடு தேடி வரும் புது சினிமா... இயக்குநர் சேரன் புதிய முயற்சி!

    By Mathi
    |

    சென்னை: வீடுகளுக்கு பேப்பர், பால் வருவது போல புதிய சினிமா படங்களும் இனி வீடு தேடி வரும் வகையில் இயக்குநர் சேரன் சினிமா டு ஹோம் (C2H) என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.

    டி.வி.டி., டி.டி.எச், இணையதளம், செட்ஆஃப் பாக்ஸ், மொபைல், சிடி உள்ளிட்ட வழிகளில் வீடுதோறும் சினிமாவை எடுத்துச் செல்லும் வகையில்தான் சினிமா டு ஹோம் (Cinema to Home) என்ற புதிய நிறுவனத்தை இயக்குநர் சேரன் தொடங்கியிருக்கிறார்.

    இயக்குநர் சேரன்

    இயக்குநர் சேரன்

    இந்த நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநரும், சினிமா டு ஹோம் நிறுவனருமான சேரன் பேசியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களின் ரசனை மாற்றம் உள்ளிட்ட பலவற்றால் சினிமா தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. நட்சத்திர நடிகர்களின் படங்களைத் தவிர்த்து மற்ற படங்களுக்கு திரையரங்குகள் இல்லாத நிலை அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது.

    கரை சேராதவர்கள்

    கரை சேராதவர்கள்

    சினிமாவை நம்பி பயணம் செய்பவர்களில் இன்னும் நிறைய பேர் கரை சேரவில்லை. இருந்தாலும் அடுத்த பயணத்துக்கான படகுகளை தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

    கேள்விக்குறியுடன் கோடம்பாக்கம்

    கேள்விக்குறியுடன் கோடம்பாக்கம்

    5 ஆண்டுகளுக்கு முன் இருந்த சினிமாவின் நிலைமை தற்போது மாறியுள்ளது. இதற்கு நாளுக்கு நாள் மாறி வரும் மக்களின் ரசனை மாற்றங்கள், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி ஆகியவையே காரணம். இதனால் கோடம்பாக்கத்தில் கனவுகளுடன் திரிந்து கொண்டிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

    கிடப்பில் கிடக்கும் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

    கிடப்பில் கிடக்கும் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை

    நான் இயக்கியுள்ள ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று 8 மாதங்கள் ஆகியும் வெளியிட முடியாத நிலை உள்ளது. அப்படத்தை இன்றைய சூழலில் திரைக்கு கொண்டு வந்தால், அப்படத்தால் நான் பெற்ற கடனை அடைக்க முடியாது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவுதான் இது. நண்பர்களின் துணையுடன் பலவிதங்களில் ஆராய்ந்த பின்னர் முடியும் என்கிற நிலையில் இந்நிறுவனம் உதயமாகியுள்ளது.

    வெளிவந்தது 143- வெளிவராதது 155

    வெளிவந்தது 143- வெளிவராதது 155

    நடப்பாண்டில் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படங்களின் எண்ணிக்கை 298, ஆனால் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 143, வெளிவராத படங்கள் 155 ஆகும். இதுதான் தற்போதைய தமிழ் சினிமாவின் நிலை.

    திரையரங்குகளுக்கு எதிரானது அல்ல..

    திரையரங்குகளுக்கு எதிரானது அல்ல..

    இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இது திரையரங்குகளுக்கு எதிரான நிறுவனம் கிடையாது. திரையரங்குகள் மூலம் படம் வெளிவரும் அதே சமயத்தில் இந்நிறுவனம் மூலமும் படம் வெளிவரும். திரையரங்குகளின் நலனை இந்நிறுவனம் ஒரு போதும் பாதிக்காது.

    மாற்று வியாபார தளம்

    மாற்று வியாபார தளம்

    சிறிய திரைப்படங்களை குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட்டு அதே நாளில் மற்ற தளங்களில் எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே "சினிமா டு ஹோம்' நிறுவனத்தின் நோக்கம். இந்நிறுவனம் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மாற்று வியாபாரத் தளமாக இயங்கும்.

    தரமான படங்களை இந்நிறுவனத்தின் மூலம் வெளியே கொண்டு வருவோம். தவறான முறையில் படங்களை பதிவிறக்கம் செய்வோர், பதிவு செய்வோர் ஆகியோரைக் கண்காணிக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம். இதில் 7,000 தொழிலாளர்கள் பணிபுரிய இருக்கிறார்கள். இவ்வாறு சேரன் பேசினார்.

    திரை உலகம் வாழ்த்து

    திரை உலகம் வாழ்த்து

    இந்த புது முயற்சிக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சீமான், அமீர் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துப் பேசினர்.

    வசந்தபாலன் விளக்கம்

    வசந்தபாலன் விளக்கம்

    சேரனின் இம்முயற்சி தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: தமிழ்சினிமாவின் பிரச்சினை சம்மந்தமாக சிலவற்றை பட்டியலிட்டு இருந்தேன். அவையெல்லாவற்றிருக்கும் ஒரு முடிவாக இயக்குனர் சேரன் C2H என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார். C2H means legal cinema 2 home என்று அர்த்தம்.திரையரங்குகளில் திரையிட தடுமாறுகிற நல்ல படங்களை சிடிகளாய் போட்டு நேரடி டீலர்கள் முலம் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சேர்ப்பது என்ற திட்டம். வீடுகளுக்கு தினத்தந்தி, குமுதம், ஆனந்தவிகடன் போடுவது போல வெள்ளிக்கிழமை ஒரு புதுப்படம் உங்கள் வீடு தேடி வரும். மாதச்சந்தா கட்டி சட்டப்படி தயாரிக்கப்பட்ட சிடியில் புது படத்தை குடும்பத்தோடு பாருங்கள். நல்ல திட்டம். வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tamil filmmaker Cheran, who has floated a new company called C2H - Cinema to Home, says the platform will allow young filmmakers and producers to not solely rely on theatrical releases but create alternate sources of revenue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X