twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொற்காலம் படத்திற்கு 23வது பிறந்தநாள்.. வாழ்த்திய ரசிகர்.. நெகிழ்ந்து போன சேரன்!

    |

    சென்னை: பொற்காலம் படம் வெளியாகி 23 ஆண்டுக்ள் ஆவதை நினைவுப்படுத்திய ரசிகரால் நெகிழ்ந்து போயுள்ளார் இயக்குநர் சேரன்.

    இயக்குநர் சேரனின் இரண்டாவது படம் பொற்காலம். 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸானது. இந்தப்படத்தில் முரளி, மீனா, சங்கவி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் ஒரு மாதத்திற்கும் மேலாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி சாதனை படைத்தது.

    அக்காவுக்கு போட்டியா கிளாமர்.. குட்டி டிரெஸில் இன்ஸ்டாவை கதறவிடும் யாஷிகா ஆனந்தின் தங்கை!அக்காவுக்கு போட்டியா கிளாமர்.. குட்டி டிரெஸில் இன்ஸ்டாவை கதறவிடும் யாஷிகா ஆனந்தின் தங்கை!

    ஃபேவரைட் பாடல்கள்

    ஃபேவரைட் பாடல்கள்

    படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் பெரும் ஹிட்டடித்தன. குறிப்பாக தஞ்சாவூரு மண்ணு எடுத்த.. சிங்குச்சா சிங்குச்சா.. ஊனம் ஊனம்.. கருவேலங்க காட்டுகுள்ள கட்டிவச்ச கூட்டுக்குள்ள.. ஆகிய பாடல்கள் இன்றும் மக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன.

    பொற்காலத்துக்கு 23 வயசு

    பொற்காலத்துக்கு 23 வயசு

    இந்நிலையில் இப்படத்தின் 23வது பிறந்த நாள் இன்று. இதனை முன்னிட்டு ரசிகர் ஒருவர் சேரனின் டிவிட்டர் பக்கத்தில் படம் இதனை நினைவுபடுத்தி படம் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

    நினைவுபடுத்திய ரசிகர்

    அவர் பதிவிட்டுள்ள ட்டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, உங்கள் "பொற்காலம்" திரைக் காவியத்திற்கு இன்று 23வது பிறந்தநாள்.
    இந்த 22 ஆண்டுகளில் நீங்கள் செய்த பரிசோதனை முயற்சிகளும், அதில் கற்றுக்கொண்ட பாடங்களும் ஏராளம்!
    அவைகள் வரும் காலத்திற்கு நல்ல வழிகாட்டியாக அமையட்டும்..
    "ராஜாவுக்கு செக்"கிற்காக ஆவலாக காத்திருக்கிறேன்.. என தெரிவித்துள்ளார்.

    பசுமையான நினைவுகள்

    ரசிகரின் இந்த டிவிட்டை பார்த்த சேரன், நெகிழ்ந்து போயுள்ளார். மேலும் அந்த ரசிகர் பதில் தெரிவித்து டிவிட்டியிருக்கிறார். அவர் தனது டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, நன்றி உதயகுமார் அவர்களே.. விரல் நுனில வச்சிருக்கீங்க போல..
    பொற்காலம் என்னால் மறக்கமுடியாத அனுபவங்களை தந்த படம்.. 40 நாட்கள் தொடர் மழையிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி 100 நாட்களை கடந்த படம். அந்தப்படத்தின் பாடல்கள், முரளி சார், மீனா மேடம்மின் நடிப்பு...எல்லாம் பசுமையான நினைவுகள் என தெரிவித்திருக்கிறார்.

    படைப்புகளில் காவியங்கள்

    சேரனின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் ''தஞ்சாவூரு மண்ணு எடுத்து'' ''ஊனம் ஊனம் ஊனம் இங்கே யாருங்கோ'' காலத்தால் அழியாத பாடல்கள் கொண்ட படம். பொற்காலம், தேசிய கீதம், பாண்டவர் பூமி போன்றவைகள் 90களில் இயக்குனர் சேரனின் படைப்புகளில் காவியங்கள் என தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Cheran's Porkalam Movie celebrates 23rd birthday today. Cheran melted for his fan tweet about Porkalam movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X