எஸ்.ஜே. சூர்யாவுக்கு கிடைக்க வேண்டியது சேரனுக்கு: என்னங்கய்யா நடக்குது?
சென்னை: சேரன், எஸ்.ஜே. சூர்யாவை பார்த்து என்னய்யா நடக்குது என்று ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள மான்ஸ்டர் படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. என் படத்திற்கு முதல் முறையாக யு சான்று அளித்துள்ளது சென்சார் போர்டு என்று எஸ்.ஜே. சூர்யாவே வியந்தார்.

எஸ்.ஜே. சூர்யா படத்திற்கு யு சான்றா என்று வியக்காதவர்களே இல்லை. இந்நிலையில் எப்பொழுதுமே யு சான்று பெறும் சேரனின் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றால் நம்புவீர்களா?
நம்பித் தான் ஆக வேண்டும். ஏனென்றால் அது தான் உண்மை. ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள த்ரில்லர் படமான ராஜாவுக்கு செக்கிற்கு தான் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் போர்டு.
இது குறித்து சேரன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ராஜாவுக்கு செக்.. சென்சார் முடிந்து UA சான்றிதழ் கிடைத்துள்ளது.. இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் இதை தெரிவிக்கும்போது உங்க படங்கள் எல்லாமே U சான்றிதழ்தான்... முதல் முறையா நாங்க அந்த ரெக்கார்ட உடைச்சுருக்கோம்னு சொன்னார்.. நான் " பரவாயில்ல.. நீங்க ட்ரெண்ட்ல இருக்கிங்கன்னு சொன்னேன் என்றார்.


Click it and Unblock the Notifications











