உங்களுக்குள் வசைபாடாதீங்க: 'தல', 'தளபதி' ரசிகர்களுக்கு இயக்குனர் சேரன் வேண்டுகோள்

By Siva

சென்னை: தல, தளபதி ரசிகர்களுக்கு இயக்குனரும், நடிகருமான சேரன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜில்லா, வீரம் படம் ரிலீஸானதில் இருந்து விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மோதிக் கொள்கின்றனர். ஒருவரையொருவர் இகழ்ந்து பேசுகின்றனர்.

இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான சேரன் இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தலையா?... தளபதியா?..

தலையா?... தளபதியா?..

தலையா?... தளபதியா?..
அஜித்தா?.. விஜய்யா?..
பொங்கல் போட்டியில யாருக்கு வெற்றி...
ஜில்லாவா?... வீரமா?...

இந்த ஆரோக்கியமான போட்டி சினிமா உலகத்துக்கு சம்பாரிச்சு தரப்போறது எத்தனையோ கோடிகள்...

ரசிகர் கூட்டம்

ரசிகர் கூட்டம்

முதல் இடம் இரண்டாம் இடம் தாண்டி ரெண்டு பேருமே தனக்காக உருவாக்கி வச்சுருக்க ரசிகர் கூட்டம் இவுங்க ரெண்டுபேரோட படங்களையும் இன்னும் எதிர்பார்த்து காத்திருக்காங்கன்ற நிலைமை தான் இவ்வளவு கோடிகளை திரையுலகத்துக்கு சம்பாரிச்சு தருது. ஒரு வகையில் இது ஆரோக்கியம் தான்.

வசைபாடாதீங்க

வசைபாடாதீங்க

ஆனாலும் அந்த சராசரி பாமர ரசிகன் இன்னும் எதிர்பார்க்கிறான் என்பதே உண்மை. அந்த எதிர்பார்ப்பை இரண்டு படங்களும் பூர்த்தி செய்ததா? இந்த கேள்விகளை அதற்கான பதிலை எப்ப்படி சொல்வது என தெரியாமல் இன்று நமது வலைதளங்கள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற எல்லா நெட்வொர்க்கிலும் ஒவ்வொருவரின் ரசிகர்களும் மாறி மாறி இகழ்ந்து வசைபாடி எழுதுவது வேதனையாக இருக்கிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

உங்களை போன்ற ரசிகர்களால் தான் அவர்கள் இருவரும் இந்த உயரம் போனார்கள். அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்பதை எழுதினால் அதற்கு செவிசாய்க்க மாட்டார்களா. இருவருக்குமே அந்த பக்குவம் இருக்கிறது.

கிண்டல் வேண்டம்

கிண்டல் வேண்டம்

ஆகவே ரசிகர்களே.... உங்கள் தேவை அவர்களிடம் என்ன என்பதை உணர்த்துவது தான் நாகரீகம். மாறாக கிண்டல் செய்து எழுதுவதை மாற்றி இன்னும் அவர்களை உயரம் கொண்டுபோக வித்திடுங்கள். இதனால் உங்களுக்கு நல்ல படங்களும். திரையுலகுக்கு நிறைய வருமானமும், நல்ல சிந்தனை உள்ள புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கலாம் என்று சேரன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X