சேரனின் 'திருமணம்'... ஏப்ரல் 12ம் தேதி மீண்டும் ரிலீசாகிறது!
சேரன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியாகிய திருமணம் திரைப்படம் வரும் ஏப்ரம் 12ம் தேதி மீண்டும் ரிலீசாகிறது.
Recommended Video

சென்னை: சேரன் இயக்கிய திருமணம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் திருமணம். இப்படம் இந்த மாத துவக்கத்தில் வெளியானது. அப்போது, இப்படத்துடன் 90 எம்எல், தடம், தாதா 87 ஆகிய படங்களும் வெளியாகின.

குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை. பெரும்பாலான தியேட்டர்களில் 90 எம்எல் படமே திரையிடப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அருண் விஜய்யின் 'தடம்' திரைப்படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டன.
ஆனால் திருமணம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











