லாஸ்லியா ரொம்ப மோசம்.. நம்பவே நம்பாதீங்க.. ரசிகையின் டிவிட்டுக்கு சேரன் சொன்ன பதில் இதுதான்!

Recommended Video

திருமணம் குறித்த முக்கிய தகவலை கூறிய லாஸ்லியா | losliya interview about her marriage

சென்னை: லாஸ்லியாவை நம்ப வேண்டாம் என்று கூறிய ரசிகைக்கு இயக்குநர் சேரன் பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் எதற்காக கலந்து கொண்டாரோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. டிவிட்டர் முழுவதும் சேரப்பா சேரப்பா என ரசிகர்களும் ரசிகைகளும் உருகி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் நேர்மையாக இருந்த போட்டியாளர்களில் ஒருவர் சேரன். யார் குறித்தும் பின்னால் பேசாமல், தவறாக சித்தரிக்காமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தவர் சேரன். மற்றவர்களிடமும் எந்த பாகுபாடும் இன்றி நடந்த கொண்டார்.

மகளுக்கு ஈடாக

மகளுக்கு ஈடாக

லாஸ்லியா, சேரனை பார்த்து தனது அப்பாவை போல் இருப்பதாக கூறியதோடு சேரப்பா என்றே ஆரம்பத்தில் அழைத்து வந்தார். இதனால் பெற்ற மகளுக்கு ஈடாக அவர் மீது பாசம் காட்டினார் சேரன்.

சேரன் நடிக்கிறார்

சேரன் நடிக்கிறார்

ஆனால் கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா அவரது பேச்சைக் கேட்டு சேரனின் மீது சந்தேகப்பட்டார். கவின், உன்னை வைத்து சேரன் டிராமா பண்ணுகிறார் என்று கூறியதை நம்பி, யார் நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை என சேரன், நடிப்பதாக கமலிடம் மறைமுகமாக கூறினார் லாஸ்லியா.

சேரனிடம் சண்டை

சேரனிடம் சண்டை

அதுமட்டுமின்றி கவின், சேரன் குறித்து தரக்குறைவாக பேசிய போதும் அவரை கண்டிக்காமல் அவர் சொல்வது சரிதான் என்பது போல நடந்து கொண்டார். மதுமிதாவுடன் மல்லுக்கு நின்ற போதும் கூட சேரனை திட்டித்தீர்த்தார் லாஸ்லியா.

லாஸ்லியாவுக்கு எதிர்ப்பு

லாஸ்லியாவுக்கு எதிர்ப்பு

இதனால் கடுப்பான மக்கள், அப்போதே லாஸ்லியாவுடன் பழக வேண்டாம் என சேரனை கண்டித்தனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் டிவிட்டரில் ஆக்டிவாக உள்ளார் சேரன். ரசிகர்களின் கேள்விகளுக்கும் அன்புக்கும் பதில் கூறி வருகிறார்.

பெருமைபடுகிறேன்

பெருமைபடுகிறேன்

இந்நிலையில் ரசிகை ஒருவர், சேரப்பா நீங்கள் பல மகள்களின் இதயத்தை வென்றிருக்கிறீர்கள். நானும் உங்களின் மகள்களில் ஒருவர் என்பதில் பெருமை கொள்கிறேன். தற்போது தீவிர ரசிகை. நான் உங்களுக்காகதான் பிக்பாஸ் பார்த்தேன். அனைவருக்கும் நீங்கள் வழங்கிய நேர்மையான அட்வைஸ் எனக்கு பிடித்திருந்தது.

பயன்படுத்திக்கொண்டாள்

ஆனால் சில நேரம் நான் லாஸ்லியா குறித்து மோசமாக உணர்ந்தேன். லாஸ்லியா உங்களுடைய உண்மையான அன்பை பயன்படுத்திக்கொண்டால். நான் தவறாகக்கூட இருக்கலாம் என்றார்.

எதிர்மறையா நினைக்காதீங்க

இந்த டிவிட்டை பார்த்த சேரன், உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி. லாஸ்லியா ஒரு நல்ல பெண். அவர் நீங்கள் நினைப்பது போன்றில்லை. அதனால் எதிர்மறையாக நினைக்கவேண்டாம். மீண்டும் ஒருமுறை நன்றி மா.. என பதிவிட்டிருக்கிறார் சேரன்.

விட்டுக்கொடுக்காத சேரன்

விட்டுக்கொடுக்காத சேரன்

சிக்கனை பார்த்ததும் சேரன் என்னை மறந்துவிட்டார் என கமலிடம் மிக கேவலமான ஒரு புகாரை கூறி அசிங்கப்படுத்தினார் லாஸ்லியா. ஆனாலும் அவரை விட்டுக்கொடுக்காமல் இருந்த சேரன், பிக்பாஸ் முடிந்த பிறகும் அதனை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X