அன்பின் வடிவம் அம்மா… தாய்மையைக் கொண்டாடும் திரைப்பிரபலங்கள் !
சென்னை : உலகில் ஈடு இணையற்ற தெய்வம் ஒன்று இருக்கிறது என்றால் தாய். அன்னைதான் முதல் தெய்வம், நம்மை உலகிற்கு அடையாளம் காட்டியவர் அன்னை மட்டுமே.
மே 9ந் தேதி ஆண்டுதோறும் சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் பலரும் தங்கள் தாய்க்கு வாழ்த்துக்களை கூறி நன்றி தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பிரபலங்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து மகளிருக்கும்
அந்த வகையில் இயக்குனரும், நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், என் அன்னைக்கும் அன்னை போலவே அனைத்து குழந்தைகள் மீதும் அன்பு காட்டும் அனைத்து மகளிர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள்
சென்னை 28 திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் விஜயலட்சுமி. இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். இவர் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து கூறி ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், Hide and seek ல எங்க இருந்தாலும் வந்து ''Found u'' soldran.எப்படி நிலன்னு கேட்டா. உனக்கு எனக்கும் Heart to heart connection இருக்கு மம்மி. I can find you wherever you are ன்றான். #motherhood is a bliss. அம்மாக்களுக்கும் அம்மாவான அப்பாக்களுக்கும் #happymothersday என பதிவிட்டுள்ளார்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான விஜே ரம்யா சுப்பிரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அனைத்து தாய் மார்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை பவித்ரா லட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சியமான நடிகை பவித்ரா லட்சுமி. தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, #MothersDay உலகம் முழுவதும் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் வாழ்த்துக்கள் என அனைவருக்கும் அன்னைய ர் தின வாழ்த்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











