வாழ்த்துக்கள் மகளே லட்சியங்கள் வெல்லட்டும் .. லாஸ்லியாவுக்கு வாழ்த்துக் கூறிய சேரன் அப்பா!

சென்னை : லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

Recommended Video

Losliya Response on Her First Movie FRIENDSHIP | Harbhajan Singh, Friendship movie public review

லாஸ்லியா, ஹர்பஜன்சிங்,அர்ஜுன், சதீஷ் என மிகப் பெரிய பட்டாளமே இதில் நடித்திருக்க இந்த படத்தை ஜே பி ஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரித்திருந்தனர்.

கல்லூரி கதைகளை மையமாகக் கொண்டு த்ரில்லர் படமாக வெளியான ஃப்ரெண்ட்ஷிப் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் லாஸ்லியாவை அன்பு மகளே வெல்லட்டும் உன் லட்சியங்கள் என இயக்குனர் சேரன் வாழ்த்தியுள்ளார்.

மிகவும் ஸ்பெஷல்

மிகவும் ஸ்பெஷல்

செய்தி வாசிப்பாளராக இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த லாஸ்லியா விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். பிக் பாஸ் சீசன் 3 இதுவரை வெளியான சீசன்களிலேயே மிகவும் ஸ்பெஷல் என்று சொல்லலாம் இந்த அளவிற்கு இந்த சீசனில் பங்கு கொண்ட அனைவரும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளனர். இதில் கலந்து கொண்ட பிக் பாஸ் லாஸ்லியாவுக்கு இப்பொழுது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

ஃப்ரெண்ட்ஷிப்

ஃப்ரெண்ட்ஷிப்

இந்த நிலையில் பல இயக்குனர்களும் லாஸ்லியாவை தங்களது படங்களில் நடிக்கவைக்க முயற்சித்துக் கொண்டிருக்க இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தை ஜே பி ஆர் மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரிக்கின்றனர். வேல்முருகன் செந்தில்குமார் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக உள்ளனர். பிஎம் உதயகுமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முதல் திரைப்படம்

முதல் திரைப்படம்

பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றி பேச இருக்கும் இந்த படம் செப்டம்பர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

படக்குழுவும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக திரையரங்குகளுக்கு விசிட் செய்து அமர்க்களப்படுத்தி இருந்தனர். லாஸ்லியாவுக்கு இது முதல் திரைப்படம் என்பதால் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

உன் லட்சியங்கள் வெல்லட்டும் மகளே

உன் லட்சியங்கள் வெல்லட்டும் மகளே

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவுக்கு அப்பாவாக இருந்த இயக்குனர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். " வாழ்த்துக்கள் மகளே... உங்கள் கனவுகள் நனவாகி உங்களின் லட்சியங்கள் வெல்லட்டும். உனது குடும்பத்திற்காகவே இந்த முதல் திரைப்படத்திலும் தொடர்ந்து வரும் படங்களிலும் நற்பெயர் பெற்று நீ வெல்வாய் என்ற நம்பிக்கை உண்டு.. இனி நல்லதே நடக்கட்டும் .. " இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தனக்கு கிடைத்த மகள் லாஸ்லியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X