பிதாமகன், சினிமாவோடு தீராக்காதல் செய்யும் கலைஞனுக்கு பிறந்தநாள்.. பாரதிராஜாவுக்கு சேரன் வாழ்த்து!
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவுக்கு இயக்குநர் சேரன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா இன்று தனது 77 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை தனது கவிதை மொழியிலேயே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார் வைரமுத்து. அவர் பதிவிட்டிருப்பதாவது,

மண்ணின்
இருதயத்தை...
கல்லின்
கண்ணீரை...
அரிவாளின்
அழகியலை...
சரளைகளின்
சரளி வரிசையை...
பாவப்பட்ட தெய்வங்களை...
ஊனப்பட்டோர் உளவியலை...
கலாசாரப்
புதை படிவங்களைக்
கலையாத கலைசெய்த
பாரதிராஜாவை
தாதா சாகேப்
பால்கே விருதுக்குப்
பரிந்துரைக்கிறோம்.
நீங்களும்.. என பாரதிராஜாவின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார் வைரமுத்து.
இதேபோல் இயக்குநர் சேரனும் இயகுநர் பாரதிராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆயிரம் இளைஞர்களின் கனவுகளுக்கு வாசலும் பாதையும் அமைத்துக்கொடுத்த எங்கள் அன்புத்தந்தை, பிதாமகன், சினிமாவோடு தீராக்காதல் செய்யும் கலைஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நீங்கள் பிறந்ததால் நாங்கள் வாழ்கிறோம்... என குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











