twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    8 வழிச்சாலை, எரிவாயு குழாய், மழையும் பேயாது ஒரு ... பேயாது: சேரன் குமுறல்

    By Siva
    |

    சென்னை: விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவது குறித்து காட்டமாக ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் சேரன். அவர் கோபப்பட்டதில் தவறே இல்லை.

    இயக்குநரும், நடிகருமான சேரன் ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். சமூக பிரச்சனைகள், சினிமா பற்றி அவ்வப்போது கருத்து தெரிவிப்பார் சேரன். மேலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் அளிப்பார்.

    Cheran worries about farmers

    இது தவிர நெட்டிசன்கள் போடும் சுவாரஸ்யமான ட்வீட்டுகளை ரீட்வீட் செய்வார். மாட்டுக்கு கூட கொசுவலை கட்டி பாதுகாக்கும் விவசாயி மழை இல்லாமல் வானத்தை பார்த்த படியே இரவில் வயலில் கொசுகடியில் தூங்குகிறார்கள் என்று ஒருவர் புகைப்படத்துடன் ட்வீட் செய்ததை பார்த்த சேரனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது,

    இருக்குற மரத்தை எல்லாம் வெட்டிபுட்டு எட்டுவழிச்சாலை போடுங்க..

    காடுகரையெல்லாம் குழாய் போட்டு எரிவாயு எடுங்க..
    மழையும் பேயாது ஒரு ... பேயாது
    ஆனால் அந்த மாட்டுக்காக கொசுவலை கட்டிய விவசாயிய பாராட்டலாம்.. அது கிராமத்து மனசு.. டுவிட்டர்வாசிகளுக்கு புரியுமா... என்று தெரிவித்துள்ளார்.

    சாலைகள் அமைக்க, எரிவாயு எடுக்க என்று விவசாய நிலங்கள் நாசமாக்கப்படுகின்றது என விவசாயிகள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றனர். பசித்தால் பணத்தை சாப்பிட முடியாது, சோறு தான் தேவை. இப்படியே விவசாய நிலங்கள் எல்லாம் சாலைகளாக மாறினால் நாளை சோற்றுக்கு வழியில்லாமல் போய்விடும் என்று சமூக ஆர்வலர்கள் கத்திக் கொண்டிருப்பது யார் காதிலும் விழவில்லை. தற்போதைக்கு சோற்றுக்கு பிரச்சனை இல்லை என்பதால் விவசாய நிலங்கள் அழிவதை மக்கள் கண்டுகொள்ளவில்லை.

    இப்படியே போனால் ஊர், உலகத்திற்கே சோறு போட்டுவிட்டு ஈரத் துணியை வயிற்றில் கட்டிக் கொண்டு தூங்கும் விவசாயிகளை அவமதித்துவிட்டோமே என்று மக்கள் வருத்தப்படும் காலம் தொலைவில் இல்லை. பசியால் வயிறு கபகபவென்று எரியும்போது தான் விவசாயியின் அருமை தெரிய வரும். அப்படி யார் வயிறும் எரியக் கூடாது என்று தான் சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அது யார் காதிலும் விழுவதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director cum Cheran's tweet about farmers and their poor plight is very true.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X