For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கனடா திரைப்பட விழாவில் ஆட்டோகிராப்சேரன் இயக்கி, நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் கனடாவின் மாண்ட்ரியல் திரைப்பட விழாவுக்குத்தேர்வாகியுள்ளது.இந்த விழாவின் 28வது ஆண்டு போட்டியில் பங்கேற்க ஆசிய நாடுகளில் இருந்து தேர்வாகியுள்ள படங்களில்ஆட்டோகிராபும் ஒன்று.இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல் தொடங்கி செப்டம்பர் 6ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் சேரனும்பங்கேற்கவுள்ளார்.உலக அளவிலான திரைப்பட விழாக்கள் குறித்து சேரனுக்கு வழிகாட்டி, போட்டியிலும் பங்கேற்க வைத்தது வேறுயாருமல்ல.. இயக்குனர் மணிரத்னம் தான்.சேரனின் பொற்காலம் படத்தைப் பார்த்துவிட்டு பிரமித்த மணி, மாண்ட்ரியல் திரைப்பட விழா குறித்து எடுத்துச்சொல்லி, படத்தை இந்த விழாவில் பங்கேற்கச் செய்யுமாறு அட்வைஸ் செய்தாராம். ஆனால், சேரன் அதற்கானமுயற்சிகளில் இறங்குவதற்குள் விழாவில் பங்கேற்பதற்கான தேதிகள் முடிந்துவிட்டன.அப்போது விட்டதை இப்போது ஆட்டோகிராப் மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளார் சேரன்.ஆங்கில சப்-டைட்டிலுடன், சேரன் அனுப்பி வைத்த ஆட்டோகிராப் படத்தைப் பார்த்த நடுவர்கள், அதைவிழாவுக்குத் தேர்வு செய்துவிட்டனர். பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் சேரன்.அப்படியே விருதும் வென்றிட சேரனை வாழ்த்துவோம்!

    By Staff
    |

    சேரன் இயக்கி, நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் கனடாவின் மாண்ட்ரியல் திரைப்பட விழாவுக்குத்தேர்வாகியுள்ளது.

    இந்த விழாவின் 28வது ஆண்டு போட்டியில் பங்கேற்க ஆசிய நாடுகளில் இருந்து தேர்வாகியுள்ள படங்களில்ஆட்டோகிராபும் ஒன்று.

    இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல் தொடங்கி செப்டம்பர் 6ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் சேரனும்பங்கேற்கவுள்ளார்.

    உலக அளவிலான திரைப்பட விழாக்கள் குறித்து சேரனுக்கு வழிகாட்டி, போட்டியிலும் பங்கேற்க வைத்தது வேறுயாருமல்ல.. இயக்குனர் மணிரத்னம் தான்.

    சேரனின் பொற்காலம் படத்தைப் பார்த்துவிட்டு பிரமித்த மணி, மாண்ட்ரியல் திரைப்பட விழா குறித்து எடுத்துச்சொல்லி, படத்தை இந்த விழாவில் பங்கேற்கச் செய்யுமாறு அட்வைஸ் செய்தாராம். ஆனால், சேரன் அதற்கானமுயற்சிகளில் இறங்குவதற்குள் விழாவில் பங்கேற்பதற்கான தேதிகள் முடிந்துவிட்டன.

    அப்போது விட்டதை இப்போது ஆட்டோகிராப் மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ளார் சேரன்.

    ஆங்கில சப்-டைட்டிலுடன், சேரன் அனுப்பி வைத்த ஆட்டோகிராப் படத்தைப் பார்த்த நடுவர்கள், அதைவிழாவுக்குத் தேர்வு செய்துவிட்டனர். பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் சேரன்.

    அப்படியே விருதும் வென்றிட சேரனை வாழ்த்துவோம்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X