»   »  சேரனுக்கு ஓடி வந்து உதவிய ராமதாஸ் ஆபாசமே இல்லாமல் சினிமா எடுக்க முடியாது என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின்முகமூடியை சேரனின் தவமாய் தவமிருந்து படம் கிழித்து எறிந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.உட்டாலங்கடி சினிமாக்காரர்களை கடுமையாக விமர்சித்து வரும் ராமதாஸ், நல்ல சினிமா எடுப்போரை அவ்வப்போதுபாராட்டித் தள்ளவும் தயங்குவதில்லை. ரஜினியின் இடைக்கால வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ராமதாஸ். அவரது பாபா படத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு, படப் பெட்டிகளையும் ஆள் விட்டுத் தூக்கச் செய்து படத்தை படுதோல்வி அடையச் செய்தார். ஆனால் அதே ராமதாஸ், சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பை பாராட்டித் தள்ளினார்.காரணம், படத்தில் ஒரு காட்சியில் கூட ரஜினி புகை பிடிக்காமல் நடித்திருந்தார். அதற்காக ரஜினியைப் பாராட்டினார். இந் நிலையில் சேரனைப் பாராட்டித் தீர்த்துவிட்டார் ராமதாஸ். இந்தப் படத்துக்கு முதலில் ஒரு தயாரிப்புப் பார்ட்டி பைனான்ஸ்செய்தது. ஆனால், இடையில் அவருக்குப் பணச் சிக்கல் எழுந்தபோது, இன்னொரு தயாரிப்பாரின் உதவியை நாடினார் சேரன்.அவர் பணம் தந்து உதவினாலும், முதலில் படத்தைத் தயாரித்தவர் இந்தப் படத்தின் பெயரைச் சொல்லி வேறு சில இடங்களில்பணத்தை கடன் வாங்கியிருந்ததால், அவர்கள் பணம் கொடுக்கச் சொல்லி சேரனை அனத்தியதால் படத்தை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்துப் போனார் சேரன்.இதனால் படம் ரிலீஸ் ஆவது மாதக் கணக்கில் தள்ளிப் போனது. சேரனின் இந்தத் தவிப்பு குறித்து ராமதாசுக்குத் தகவல் போனது.இதையடுத்து சேரனை அழைத்து என்ன ஏது என்று விசாரித்தார். சேரன் சோகத்தோடு தனது நிலையை விளக்க போனை எடுத்தராமதாஸ், வினியோகஸ்தர்கள் சங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான பவர்புல் வினியோகஸ்தரைப் பிடித்து, என்ன செய்வியோதெரியாது.. சேரன் படம் வெளியில் வரணும் என்று உத்தரவிட்டாராம்.இதையடுத்து அவர் சிக்கல் செய்தவர்களைக் கூப்பிட்டு, சேரன் படம் விஷயமா ராமதாஸ் பேசச் சொன்னார்.. படம் ரிலீஸ் ஆகஉதவுங்கள். படத்தின் வசூலை வைத்து உங்கள் கடன் எல்லாம் செட்டில் செய்யப்படும். ஒத்துழைப்பு கொடுத்தால் பின்னாளில்பாமகவின் உதவி கிடைக்கும் என்றாராம்.இதைத் தொடர்ந்து சிக்கல் செய்த ஆசாமிகள் அனைவரையும் சேரனுக்குப் போனைப் போட்டு பணம் என்னப்பா பணம், அதுஇன்னைக்கி வரும் நாளைக்கும் வரும்.. நீங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்றார்களாம்.இதன் பின்னரே படம் தியேட்டருக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆனாலும் ஆனது. படத்துக்கு பாராட்டு மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சினிமாவா என்று தமிழகமே வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தந்தை-மகன்உறவை கண்கலங்க வைக்கும் விதத்தில் சித்தரித்துள்ளாராம் சேரன்.இந்த நிலையில் தான் தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்தார் ராமதாஸ். பார்த்துவிட்டு பரவசப்பட்டுப் போனவர், சேரனைவெகுவாகப் பாராட்டிவிட்டு, நீ பாரதிராஜாவின் வாரிசுப்பா என்று புகழ்ந்து தள்ளிவிட்டாராம்.இப்படம் குறித்து ராமதாஸ் கூறுகையில், ஆபாசக் காட்சிகள், குலுக்கல் நடனங்கள், புகை பிடிக்கும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாது என்று சில வறட்டு பிடிவாதக்காரர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்க முடியாத வகையில் வசனங்கள் என குப்பைகள்நிறைந்திருந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என இவர்களாகவே சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால் அத்தனையையும் தகர்த்து, தமிழ் சினிமாவின் ஆபாச முகத்திரையைக் கிழித்து, மிகவும் அருமையான, தமிழ் மணம்கமழும் திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் தம்பி சேரன்.சேரனின் படங்களைப் பார்க்கும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாரதிராஜாவைப் பார்ப்பது போல உள்ளது.பாரதிராஜா தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அவரைப் போல, அவரது வாரிசாகத் திகழ்கிறார் சேரன்.தவமாய் தவமிருந்து, ஒரு படமே அல்ல, இளைஞர்களுக்கான பாடம். இப்படத்தை அத்தனை தமிழர்களும் தங்களதுகுடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றார்.தனது படத்தை ரிலீஸ் செய்ய தானாக வந்து உதவியதோடு மட்டுமல்லாமல், படத்தை இவ்வளவு தூரம் பாராட்டிய டாக்டருக்குபோன் போட்டு நன்றி சொன்ன சேரன், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டாராம்.

சேரனுக்கு ஓடி வந்து உதவிய ராமதாஸ் ஆபாசமே இல்லாமல் சினிமா எடுக்க முடியாது என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின்முகமூடியை சேரனின் தவமாய் தவமிருந்து படம் கிழித்து எறிந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.உட்டாலங்கடி சினிமாக்காரர்களை கடுமையாக விமர்சித்து வரும் ராமதாஸ், நல்ல சினிமா எடுப்போரை அவ்வப்போதுபாராட்டித் தள்ளவும் தயங்குவதில்லை. ரஜினியின் இடைக்கால வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ராமதாஸ். அவரது பாபா படத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு, படப் பெட்டிகளையும் ஆள் விட்டுத் தூக்கச் செய்து படத்தை படுதோல்வி அடையச் செய்தார். ஆனால் அதே ராமதாஸ், சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பை பாராட்டித் தள்ளினார்.காரணம், படத்தில் ஒரு காட்சியில் கூட ரஜினி புகை பிடிக்காமல் நடித்திருந்தார். அதற்காக ரஜினியைப் பாராட்டினார். இந் நிலையில் சேரனைப் பாராட்டித் தீர்த்துவிட்டார் ராமதாஸ். இந்தப் படத்துக்கு முதலில் ஒரு தயாரிப்புப் பார்ட்டி பைனான்ஸ்செய்தது. ஆனால், இடையில் அவருக்குப் பணச் சிக்கல் எழுந்தபோது, இன்னொரு தயாரிப்பாரின் உதவியை நாடினார் சேரன்.அவர் பணம் தந்து உதவினாலும், முதலில் படத்தைத் தயாரித்தவர் இந்தப் படத்தின் பெயரைச் சொல்லி வேறு சில இடங்களில்பணத்தை கடன் வாங்கியிருந்ததால், அவர்கள் பணம் கொடுக்கச் சொல்லி சேரனை அனத்தியதால் படத்தை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்துப் போனார் சேரன்.இதனால் படம் ரிலீஸ் ஆவது மாதக் கணக்கில் தள்ளிப் போனது. சேரனின் இந்தத் தவிப்பு குறித்து ராமதாசுக்குத் தகவல் போனது.இதையடுத்து சேரனை அழைத்து என்ன ஏது என்று விசாரித்தார். சேரன் சோகத்தோடு தனது நிலையை விளக்க போனை எடுத்தராமதாஸ், வினியோகஸ்தர்கள் சங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான பவர்புல் வினியோகஸ்தரைப் பிடித்து, என்ன செய்வியோதெரியாது.. சேரன் படம் வெளியில் வரணும் என்று உத்தரவிட்டாராம்.இதையடுத்து அவர் சிக்கல் செய்தவர்களைக் கூப்பிட்டு, சேரன் படம் விஷயமா ராமதாஸ் பேசச் சொன்னார்.. படம் ரிலீஸ் ஆகஉதவுங்கள். படத்தின் வசூலை வைத்து உங்கள் கடன் எல்லாம் செட்டில் செய்யப்படும். ஒத்துழைப்பு கொடுத்தால் பின்னாளில்பாமகவின் உதவி கிடைக்கும் என்றாராம்.இதைத் தொடர்ந்து சிக்கல் செய்த ஆசாமிகள் அனைவரையும் சேரனுக்குப் போனைப் போட்டு பணம் என்னப்பா பணம், அதுஇன்னைக்கி வரும் நாளைக்கும் வரும்.. நீங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்றார்களாம்.இதன் பின்னரே படம் தியேட்டருக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆனாலும் ஆனது. படத்துக்கு பாராட்டு மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சினிமாவா என்று தமிழகமே வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தந்தை-மகன்உறவை கண்கலங்க வைக்கும் விதத்தில் சித்தரித்துள்ளாராம் சேரன்.இந்த நிலையில் தான் தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்தார் ராமதாஸ். பார்த்துவிட்டு பரவசப்பட்டுப் போனவர், சேரனைவெகுவாகப் பாராட்டிவிட்டு, நீ பாரதிராஜாவின் வாரிசுப்பா என்று புகழ்ந்து தள்ளிவிட்டாராம்.இப்படம் குறித்து ராமதாஸ் கூறுகையில், ஆபாசக் காட்சிகள், குலுக்கல் நடனங்கள், புகை பிடிக்கும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாது என்று சில வறட்டு பிடிவாதக்காரர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்க முடியாத வகையில் வசனங்கள் என குப்பைகள்நிறைந்திருந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என இவர்களாகவே சொல்லிக் கொண்டுள்ளனர். ஆனால் அத்தனையையும் தகர்த்து, தமிழ் சினிமாவின் ஆபாச முகத்திரையைக் கிழித்து, மிகவும் அருமையான, தமிழ் மணம்கமழும் திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் தம்பி சேரன்.சேரனின் படங்களைப் பார்க்கும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாரதிராஜாவைப் பார்ப்பது போல உள்ளது.பாரதிராஜா தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அவரைப் போல, அவரது வாரிசாகத் திகழ்கிறார் சேரன்.தவமாய் தவமிருந்து, ஒரு படமே அல்ல, இளைஞர்களுக்கான பாடம். இப்படத்தை அத்தனை தமிழர்களும் தங்களதுகுடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றார்.தனது படத்தை ரிலீஸ் செய்ய தானாக வந்து உதவியதோடு மட்டுமல்லாமல், படத்தை இவ்வளவு தூரம் பாராட்டிய டாக்டருக்குபோன் போட்டு நன்றி சொன்ன சேரன், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டாராம்.

Subscribe to Oneindia Tamil

ஆபாசமே இல்லாமல் சினிமா எடுக்க முடியாது என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின்முகமூடியை சேரனின் தவமாய் தவமிருந்து படம் கிழித்து எறிந்திருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

உட்டாலங்கடி சினிமாக்காரர்களை கடுமையாக விமர்சித்து வரும் ராமதாஸ், நல்ல சினிமா எடுப்போரை அவ்வப்போதுபாராட்டித் தள்ளவும் தயங்குவதில்லை. ரஜினியின் இடைக்கால வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ராமதாஸ்.

அவரது பாபா படத்தை மிகக் கடுமையாக எதிர்த்ததோடு, படப் பெட்டிகளையும் ஆள் விட்டுத் தூக்கச் செய்து படத்தை படுதோல்வி அடையச் செய்தார். ஆனால் அதே ராமதாஸ், சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பை பாராட்டித் தள்ளினார்.

காரணம், படத்தில் ஒரு காட்சியில் கூட ரஜினி புகை பிடிக்காமல் நடித்திருந்தார். அதற்காக ரஜினியைப் பாராட்டினார்.

இந் நிலையில் சேரனைப் பாராட்டித் தீர்த்துவிட்டார் ராமதாஸ். இந்தப் படத்துக்கு முதலில் ஒரு தயாரிப்புப் பார்ட்டி பைனான்ஸ்செய்தது. ஆனால், இடையில் அவருக்குப் பணச் சிக்கல் எழுந்தபோது, இன்னொரு தயாரிப்பாரின் உதவியை நாடினார் சேரன்.அவர் பணம் தந்து உதவினாலும், முதலில் படத்தைத் தயாரித்தவர் இந்தப் படத்தின் பெயரைச் சொல்லி வேறு சில இடங்களில்பணத்தை கடன் வாங்கியிருந்ததால், அவர்கள் பணம் கொடுக்கச் சொல்லி சேரனை அனத்தியதால் படத்தை ரிலீஸ் செய்யமுடியாமல் தவித்துப் போனார் சேரன்.


இதனால் படம் ரிலீஸ் ஆவது மாதக் கணக்கில் தள்ளிப் போனது. சேரனின் இந்தத் தவிப்பு குறித்து ராமதாசுக்குத் தகவல் போனது.இதையடுத்து சேரனை அழைத்து என்ன ஏது என்று விசாரித்தார். சேரன் சோகத்தோடு தனது நிலையை விளக்க போனை எடுத்தராமதாஸ், வினியோகஸ்தர்கள் சங்கத்தில் உள்ள தனக்கு நெருக்கமான பவர்புல் வினியோகஸ்தரைப் பிடித்து, என்ன செய்வியோதெரியாது.. சேரன் படம் வெளியில் வரணும் என்று உத்தரவிட்டாராம்.

இதையடுத்து அவர் சிக்கல் செய்தவர்களைக் கூப்பிட்டு, சேரன் படம் விஷயமா ராமதாஸ் பேசச் சொன்னார்.. படம் ரிலீஸ் ஆகஉதவுங்கள். படத்தின் வசூலை வைத்து உங்கள் கடன் எல்லாம் செட்டில் செய்யப்படும். ஒத்துழைப்பு கொடுத்தால் பின்னாளில்பாமகவின் உதவி கிடைக்கும் என்றாராம்.

இதைத் தொடர்ந்து சிக்கல் செய்த ஆசாமிகள் அனைவரையும் சேரனுக்குப் போனைப் போட்டு பணம் என்னப்பா பணம், அதுஇன்னைக்கி வரும் நாளைக்கும் வரும்.. நீங்க படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்றார்களாம்.

இதன் பின்னரே படம் தியேட்டருக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆனாலும் ஆனது. படத்துக்கு பாராட்டு மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சினிமாவா என்று தமிழகமே வாயைப் பிளந்து கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு தந்தை-மகன்உறவை கண்கலங்க வைக்கும் விதத்தில் சித்தரித்துள்ளாராம் சேரன்.

இந்த நிலையில் தான் தவமாய் தவமிருந்து படத்தைப் பார்த்தார் ராமதாஸ். பார்த்துவிட்டு பரவசப்பட்டுப் போனவர், சேரனைவெகுவாகப் பாராட்டிவிட்டு, நீ பாரதிராஜாவின் வாரிசுப்பா என்று புகழ்ந்து தள்ளிவிட்டாராம்.

இப்படம் குறித்து ராமதாஸ் கூறுகையில், ஆபாசக் காட்சிகள், குலுக்கல் நடனங்கள், புகை பிடிக்கும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாது என்று சில வறட்டு பிடிவாதக்காரர்கள் கூறிக் கொண்டுள்ளனர்.


முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், குடும்பத்தினருடன் உட்கார்ந்து பார்த்து ரசிக்க முடியாத வகையில் வசனங்கள் என குப்பைகள்நிறைந்திருந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என இவர்களாகவே சொல்லிக் கொண்டுள்ளனர்.

ஆனால் அத்தனையையும் தகர்த்து, தமிழ் சினிமாவின் ஆபாச முகத்திரையைக் கிழித்து, மிகவும் அருமையான, தமிழ் மணம்கமழும் திரைப்படத்தைக் கொடுத்துள்ளார் தம்பி சேரன்.

சேரனின் படங்களைப் பார்க்கும்போது, 25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாரதிராஜாவைப் பார்ப்பது போல உள்ளது.

பாரதிராஜா தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அவரைப் போல, அவரது வாரிசாகத் திகழ்கிறார் சேரன்.தவமாய் தவமிருந்து, ஒரு படமே அல்ல, இளைஞர்களுக்கான பாடம். இப்படத்தை அத்தனை தமிழர்களும் தங்களதுகுடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றார்.

தனது படத்தை ரிலீஸ் செய்ய தானாக வந்து உதவியதோடு மட்டுமல்லாமல், படத்தை இவ்வளவு தூரம் பாராட்டிய டாக்டருக்குபோன் போட்டு நன்றி சொன்ன சேரன், உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிவிட்டாராம்.


Read more about: ramadoss praises cheran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil