ஹாஃப் கேர்ள்ஃப்ரண்ட் படம் சுஷாந்த் சிங்கிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டதா??

மும்பை : இந்நேரம் சுஷாந்த் சிங் ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் சில வருடங்களில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு நடிகர் தற்போது உயிரோடு இல்லை.

சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், இவர் நடிக்க வேண்டிய பல வெற்றி படங்கள் இவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு அதனால் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக சுஷாந்த் சிங்கின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் மிகவும் பிரபலமான எழுத்தாளர் சேத்தன் பகத்தின் ஒரு பழைய ட்விட் ஒன்று இப்போது ட்ரெண்ட் ஆகி அனைவரையும் சந்தேகப்பட வைத்துள்ளது.

அதிர்வலையை

அதிர்வலையை

பாலிவுட் திரைப்படத்துறையில் நடிகர்கள் தற்கொலை செய்து கொள்வது இது முதல் முறையல்ல இதற்கு முன் பல நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனினும் அதற்கான காரணங்கள் பலவற்றை சொல்லப்பட்ட நிலையில் தற்போது சுஷாந்த் சிங்கின் தற்கொலை மரணம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

தற்கொலை

தற்கொலை

சுஷாந்த் சிங் நெப்போடிசம் என்ற ஒன்றால் தான் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்யப்பட்டதாக சில கட்ட விசாரணைகளின் பெயரிலும், அவரது நெருங்கிய நண்பர்களின் உதவியுடனும் தெரியவந்துள்ளது.

தட்டிப்பறித்தார்கள்

தட்டிப்பறித்தார்கள்

இந்நிலையில் பாலிவுட் திரைத்துறையை கைக்குள் வைத்து இயக்கிவரும் ஒரு சில முக்கிய புள்ளிகளாக உள்ள சில உச்ச நட்சத்திரங்கள் சுஷாந்த் சிங்கின் பல பட வாய்ப்புகளை தட்டிப்பறித்ததாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறு இவர் நடிக்க இருந்த படங்களில் சிலவை படப்பிடிப்பு வரை சென்று பின் அந்தப் படங்களிலிருந்து சுஷாந்த் சிங்கை நீக்கியதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

வழக்குகள்

வழக்குகள்

இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர்களாக கருதப்படும் கரண் ஜோகர், சல்மான் கான், அலியா பட் போன்ற பல பேரின் மீது வழக்குகள் தொடரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேத்தன் பகத்

சேத்தன் பகத்

இந்தநிலையில் 2017ஆம் ஆண்டு அர்ஜுன் கபூர் மற்றும் சாரதா கபூர் இருவரின் நடிப்பில் சேத்தன் பகத் என்ற மிகப் பிரபலமான எழுத்தாளரின் ஹாஃப் கேர்ள்ஃப்ரண்ட் கதை படமாக எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது.

ராம்லீலா

ராம்லீலா

சுஷாந்த் சிங்கின் முதல் படமான கை போச்சே மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் அதை தொடர்ந்து நடிக்கயிருந்த படம் ராம்லீலா, இந்த படத்தை பாலிவுட்டில் பிரபல இயக்குனரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்த நிலையில் இதில் தீபிகா படுகோனேவுடன் இணைந்து சுஷாந்த் சிங் ராஜ்புட் லீட் ரோலில் நடிப்பதாக இருந்தது பின் அது மாறி ரன்வீர் சிங் அதில் நடித்திருந்தார்.

அசைக்க முடியாத

அசைக்க முடியாத

ராம்லீலா படத்தை தொடர்ந்து ஆஷிக் 2, பஜிராவோ மஸ்தானி, பபிக்ரே, சதக் 2 என பல படங்கள் சுஷாந்த் சிங் நடிக்க ஒப்பந்தமாகி பின், இவரை அந்த படங்களில் இருந்து நீக்கப்பட்டு வேறு கதாநாயகர்களை நடிக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர் நடிக்கயிருந்த படங்களில் எல்லாம் ஒருவேளை நடித்திருந்தால் இந்நேரம் சுஷாந்த் சிங் பாலிவுட்டில் அசைக்க முடியாத ஒரு நட்சத்திரமாக இருந்து இருப்பார்.

பழைய ட்விட்

பழைய ட்விட்

இவ்வாறு பல வெற்றிப் படங்கள் சுஷாந்திடம் இருந்து தட்டி பறிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் எழுத்தாளர் சேத்தன் பகத்தின் பழைய ட்விட் ஒன்றில் ஹாஃப் கேர்ள்ஃப்ரண்ட் என்ற தனது கதையில் சுஷாந்த் சிங் கதாநாயகனாக நடிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். பின் அந்த படத்திலிருந்து சுஷாந்த் சிங் நீக்கப்பட்டு அதில் அர்ஜுன் கபூர், சாரதா கபூர் நடிப்பில் வெளியாகியது.

Recommended Video

Sushant Singh இறப்பில் தொடரும் மர்மம்
ட்ரெண்ட்

ட்ரெண்ட்

சேத்தன் பகத்தின் இந்த ட்விட் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் அனைவரும் சேத்தன் பகத் இடம் ஏன் இப்படி செய்தீர்கள் என கேள்வியால் துளைத்தெடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X