Chetan: பெண்களை அப்படி கொடுமைப்படுத்தும் விடுதலை சீன்.. சேத்தன் சொன்ன ஷாக்கிங் விஷயம்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த விடுதலை திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விடுதலை படம் தான் கடந்த வாரம் முதலிடம் என்கின்றனர். இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் அந்த பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தும் காட்சியை பார்த்து தான் ஸ்தம்பித்து போயுள்ளனர்.
இந்நிலையில், அந்த காட்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்து பலரது திட்டுக்களை வாங்கி வரும் சேத்தன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அந்த காட்சி குறித்து விரிவாக பேசிய பேட்டி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், அவர் சொன்ன ஷாக்கிங் விஷயம் குறித்து இங்கே பார்ப்போம்..

திரும்பி பார்க்க வைத்த சேத்தன்
52 வயதாகும் நடிகர் சேத்தன் மெட்டி ஒலி உள்ளிட்ட ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிலும் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சேத்தன் விடுதலை படத்தில் வில்லனாகவே மாறி உள்ளார். இப்படியும் போலீஸ்காரங்க இருப்பாங்களா என ரசிகர்களை மிரள வைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

விடுதலை வெற்றி களிப்பில்
விடுதலை படத்தில் போலீஸ் அதிகாரி ராகவேந்திரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த சேத்தன் விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் பொல்லாதவன், படிக்காதவன், கார்த்தி உடன் கைதி என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், நம்பியாரை திட்டுவது போல ரசிகர்கள் இந்த படத்தை பார்த்த பின்னர் சேத்தனை கழுவி கழுவி ஊற்றி வரும் நிலையில், அந்த வெற்றி களிப்பில் அவர் அளித்த பேட்டி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

நிர்வாணக் காட்சி எப்படி எடுக்கப்பட்டது
சுமார் 20க்கும் அதிகமான பெண்கள் அந்த இடத்தில் நிர்வாணமாக இருப்பதை போன்ற காட்சியை வெற்றிமாறன் விடுதலை படத்தில் எடுத்து மிரட்டி இருக்கிறார். அந்த காட்சியில் நடிக்கும் போது உங்க மனநிலை எப்படி இருந்தது என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு ரொம்ப கூலாகவே பதில் அளித்த சேத்தன் அந்த காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்கிற ரகசியத்தையும் போட்டு உடைத்துள்ளார்.

நிர்வாணமாக யாரும் நடிக்கல
முதலில் அந்த காட்சியில் யாருமே நிர்வாணமாக நடிக்கவில்லை. ஆடைகளை கழட்டினாலும், அவர்கள் அனைவருமே ஸ்கின் டிரெஸ் அணிந்து தான் இருந்தனர். அந்த காட்சி குறித்த வீரியம் ஏற்கனவே அனைவருக்கும் தெரியும் என்பதால் இயல்பாகவே எல்லாருமே அந்த பொறுப்பை உணர்ந்து நடித்திருந்தனர்.

ஜாலியா இல்லை
மற்ற நாட்களில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒரு ஜாலியான மனப்பான்மை கூட அந்த நாளில் அப்படியொரு கொடுமையான காட்சியை படமாக்கும் போது யாருக்குமே இல்லை. பெண்களை இப்படியெல்லாம் கொடுமை படுத்தியிருக்காங்களா என்கிற எண்ணம் தான் அனைவர் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது. இயல்பாகவே ஒரு இறுகிய மனநிலையில் தான் நாங்க நடிச்சோம் என விடுதலை படத்தின் முக்கியமான அந்த காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பது குறித்து சேத்தன் கூறியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பிளர் பண்ண வேலை
நிர்வாணமாக காட்சியை எடுக்காத போதும், பிளர் போட்டு அந்த காட்சியை காட்டியதன் விளைவு உண்மையாகவே பெண்களை நிர்வாணப்படுத்தி இயக்குநர் வெற்றிமாறன் அந்த காட்சியை எடுத்துள்ளதை போன்ற தோற்றத்தையே கொடுத்தது தான் ரசிகர்களை அந்த காட்சியை பார்க்கும் போதே கொந்தளிக்க செய்துள்ளது. இரவின் நிழல் படத்தில் கூட பிரிகிடா ஸ்கின் டிரெஸ் உடையை அணிந்து கொண்டே அந்த நிர்வாணக் காட்சியில் நடித்தேன் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











