96 பட நடிகை நடிக்க தடை விதித்த பெற்றோர்
சென்னை: மகள் நியதி நடிக்க தடை வித்துள்ளார்களாம் சேத்தன், தேவதர்ஷினி.
சேத்தன், தேவதர்ஷினி ஆகியோர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதுடன் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 96 படம் மூலம் நடிகையானார் சேத்தன்-தேவதர்ஷினி தம்பதியின் மகள் நியதி.

96 படத்தில் சிறு வயது தேவதர்ஷினியாக நடித்திருந்தார் நியதி. முதல் படம் என்றாலும் அவர் அழகாகவும், நேர்த்தியாகவும் நடித்திருந்தார். அவரின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினார்கள்.
இந்நிலையில் நியதி நடிக்க அவரின் பெற்றோர் தடை விதித்துள்ளார்களாம். தடை என்றால் நிரந்தர தடை அல்ல. நியதி 10ம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வசதியாக தற்போதைக்கு நடிப்பு வேண்டாம் என்று கூறியுள்ளார்களாம்.
பின்னர் மகள் நடிப்பை தொடர்வதில் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.


Click it and Unblock the Notifications











