ரஜினி வீட்டில் நடந்த அவமானம்.. ஐஸ்வர்யா, தனுஷ் பிரிய காரணமே இதுதான்.. உண்மையை உடைத்த பிரபலம்!

சென்னை: தனுஷ் ஐஸ்வர்யா பிரிய முக்கிய காரணமே ரஜினி வீட்டில் நடந்த அந்த சம்பவம் தான் என்று செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஒரே மாதிரி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

18 ஆண்டுகள் மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்கள், ஒரு அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவலையில் ஆழ்த்தியது.

Cheyaru Balu reveals the reason for Aishwarya and Dhanushs split

தனுஷ்-ஐஸ்வர்யா: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்து இரண்டு ஆண்டுக்கு மேலான நிலையில், இதுவரை ரஜினிகாந்த் மௌனமாகவே இருந்து வருகிறார். ஆனால் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, இவர்கள் பிரிவதாக அறிக்கை வெளியிட்ட போதே, இவர்கள் பிரிவு நிரந்தரமானது அல்ல இவர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார்.

இருவரும் பிஸி: தனுஷூடனான பிரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா தனது கவனத்தை சினிமா பக்கம் திருப்பி உள்ளார். தற்போது இவர் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

பெரிய சண்டை: இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா பிரிந்ததற்கான காரணம் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், ஒருமுறை வீட்டு விஷேசத்திற்காக தனுஷின் பெற்றோர் ரஜினியின் வீட்டுக்கு சென்றிருந்த போது, அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விஷயம் தனுஷுக்கு தெரியவந்ததால், இருவருக்கும் இடையே பெரிய சண்டையே ஏற்பட்டுள்ளது.

கோபத்தில் தனுஷ் எடுத்த முடிவு: தனுஷ் தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். ஒரு இடத்தில் தனது தாயோ, தந்தையோ கண்ணியமாக நடத்தப்படாவிட்டால் கோபம் வரும். இந்த விஷயம் தனுஷ் ஐஸ்வர்யாவுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தியது. மேலும் தனது தாய், தந்தையையா அவமானப்படுத்துகிறீர்கள் என்ற கோபத்தில் தான் போயஸ் கார்டனில் ஒரு மாளிகையையே தனுஷ் கட்டியிருக்கிறார் என்று அந்த பேட்டியில் பாலு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X