Leo: ரசிகர்களை சந்திக்கும் விஜய்.. அக்12-ந் தேதி நடக்க இருக்கும் பிரம்மாண்ட பிரஸ் மீட்!
சென்னை: லியோ படத்தின் செய்தியாளர் சந்திப்பு 12ந் தேதி பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம், பான் இந்தியா படமாக வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
லியோ இசைவெளியீட்டு விழா: பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தானது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விழா ரத்தானதை விட விஜய்யின் பேச்சை கேட்க முடியவில்லை என்று தான் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
பிரம்மாண்டமான பிரஸ்மீட்: இவர்களின் குறையை போக்க, மாஸ்டர் இசை வெளியீட்டு விழா போல ஓட்டலில் நடத்த திட்டமிட்டனர். பின் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. படம் 19ந் தேதி வெளியாக உள்ளதால் படத்தை ப்ரோமோட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் படக்குழு இருக்கிறது. இதனால், அக்டோபர் 12ந் தேதி அனைத்து ஊடகம் மற்றும் யூடியூப் சேனல்களை அழைத்து பிரம்மாண்டமாக பிரஸ்மீட் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அரசியல் பேசுவாரா: இந்த நிகழ்ச்சியில் விஜய் அரசியல் பேசுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இசைவெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்து இருந்தால் விஜய் நிச்சயமாக அரசியல் பேசி இருப்பார் ஏன் என்றால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த பெரும்பாலானவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பில் அரசியல் பேச வாய்ப்பு இல்லை.
அடுத்தடுத்த அப்டேட்: தொடர்ந்து பேசிய செய்யாறு பாலு, அண்மையில் வெளியான லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியான 16 நிமிஷத்திலேயே ஒரு மில்லியனைத் தாண்டியது. அடுத்ததாக விஜய், த்ரிஷாவின் பாடல் ஒன்று மூன்றாவது சிங்கிளாக வெளியாக உள்ளது. இதையடுத்து கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











