படுக்கையிலேயே யூரின்.. நரக வாழ்க்கை.. கண்ணீர் வர வைக்கும் என் உயிர் தோழன் பாபுவின் சோக வாழ்க்கை!
சென்னை: நேற்று உயிரிழந்த என் உயிர் தோழன் பாபு வாழ்ந்த நரக வாழ்க்கை குறித்து செய்யாறு பாலு பேசி உள்ளார்.
பாரதி ராஜா இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளிவந்த படம் என் உயிர் தோழன். இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
முதல் படத்தின் வெற்றிக்கு பின், தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

என் உயிர் தோழன் பாபு: மனசார வாழ்த்துங்களேன் என்கிற படத்தில் நடித்தபோது சண்டை காட்சி ஒன்றுக்காக மாடியிலிருந்து கீழே குதித்த போது முதுகு தண்டுவடத்தில் அடிப்பட்டு படுத்த படுக்கையானார். கடந்த சில மாதங்களாக அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.
படுக்கையிலேயே யூரின்: இந்நிலையில் சினிமா விமர்சகரான செய்யாறு பாலு, என் உயிர் தோழன் பாபு வாழ்ந்த நரக வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். அதில், என் உயிர் தோழன் 30 ஆண்டுகாலம் படுத்த படுக்கையாக இருந்துதான் அவரது உயிர் பிரிந்துள்ளது. கொடி கட்டி பறந்து ராஜா போல வாழ்ந்த பாபு, படுத்த படுக்கையாகி, படுக்கையிலேயே யூரின் போய் நரக வாழ்க்கை வாழ்ந்து உயிரிழந்துள்ளார்.

ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது: மனசார வாழ்த்துங்களேன் படத்தின் சண்டை காட்சியின் மாடியில் இருந்து குதிக்கும் சீனில் டூப்பே இல்லாமல் குதித்துள்ளார். அப்போது டைமிங் மிஸ்ஸாகி விட்டதால், கீழே இருந்த மெத்தையில் குதிக்காமல் தரையில் குதித்துள்ளார். இதனால், இவரது முதுகுத்தண்டு நொறுங்கிவிட்டது. அந்த ஒரு நொடியில் வாழ்க்கை மொத்தமும் மாறிவிடுகிறது.
நிரந்தரமாக: இதையடுத்து பாரதி ராஜா, பொன்வண்ணன் ஆகியோர் உதவி செய்ததை அடுத்து, எழுந்து நிற்கக்கூடிய அளவிற்கு குணமாகிவந்தார். இந்த நேரத்தில் இந்த பிரச்சனை குணப்படுத்த ஹாலோபதியில் மருந்து இருக்கிறது என்று நம்பி சேர்க்கிறார். ஆனால், அந்த சிகிச்சை தவறாகி நிரந்தரமாக படுத்தப்படுக்கையாகி விடுகிறார்.
பிரச்சனைக்கு மேல பிரச்சனை: வாழ்க்கையில் பிரச்சனை வந்தா மொத்தமா சேர்ந்து வரும்னு சொல்லுவாங்க அப்படித்தான் இவர் வாழ்க்கையில் பிரச்சனைக்கு மேல பிரச்சனை. பாபுவின் தந்தை ஒரு வங்கி மேலாளர் இவர், சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் ஒரு சிட்பண்டில் போட, அந்த சிட்பண்ட்காரன் மொத்த பணத்தை தூக்கிட்டு ஓடிவிடுகிறான். இதனால் மொத்த பணமும் போய் கீழ்பாக்கத்தில் மாளிகை வீட்டில் இருந்த இவர்கள் வாடகை வீட்டிற்கு போகவேண்டிய நிலைமை வந்துவிடுகிறது.


Click it and Unblock the Notifications











