அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பிரிவு உண்மையா? அபிக்கு மனைவி வளர்ச்சி பிடிக்கல.. செய்யாறு பாலு பேட்டி!
சென்னை: அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து செய்யாறு பாலு பேட்டி அளித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் பிரிவா: இந்நிலையில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரியப் போவதாக சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. காரணம் அபிஷேக் பச்சன் கை விரலில் போட்டிருந்த மோதிரம் இல்லாதது தான் இந்த சர்ச்சை விவாதப்பொருளாகி உள்ளது. காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவரும் 16 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் தற்போது இது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறு பாலு பேட்டி: இதுகுறித்து, யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ள செய்யாறு பாலு, அதில் அந்த ஜோடி சேர்ந்ததில் இருந்தே பல பிரச்சனைகள் அவர்களை பலர் வாழ்த்தினாலும், சிலர், இந்த ஜோடி எப்போது பிரியும் என்றே எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், காதலுக்காக அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் இத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
ஈகோ பிரச்சனையா: மேலும், அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணமான 6 மாதத்திலேயே ஈகோ பிரச்சனை ஏற்பட்டது. வெளியில் போனால் பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இதனால் ஈகோ ஏற்பட, அதை கண்டுபிடித்து மகனுக்கு அட்வைஸ் கொடுத்தவர் அமிதாப் பச்சன் தான். அதன் பிறகு மனைவியின் வளர்ச்சியை ரசிக்க ஆரம்பித்தேன் என்று அபிஷேக் பச்சனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நெருப்பு இல்லாமல் புகையாது: ஆனால், இப்போது இந்த விவாகரத்து பிரச்சனை தலைதூக்கி இருக்கு என்றால், நெருப்பு இல்லாமல் புகையாது என்றுதான் அர்த்தம். ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு படு பிஸியாக இருந்தார், அதுமட்டுமில்லாமல் பல முத்தக்காட்சியிலும் நடித்து இருக்கிறார். ஆனால், அப்போது எல்லாம் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இத்தனை ஆண்டுகளுக்கு பின் இவர்களின் மன கசப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











