திவாலான நடிகை.. எம்.ஜி.ஆர் எடுத்த அதிரடி முடிவு.. பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: திவாலான நடிகையாக அறிவிக்கப்பட்ட வெண்ணிற ஆடை நிர்மலா குறித்து செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்.
சிவி ஸ்ரீதர் இயக்கத்தில் 1965ம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நிர்மலா படத்தின் வெற்றிக்குபின் தன்னுடைய பெயரை வெண்ணிற ஆடை நிர்மலாவாக மாற்றினார்.

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் ரகசிய போலீஸ் 115, மன்னிப்பு, பூவா தலையா, எங்க மாமா, இதயக்கனி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்தார்.
ஜெயலலிதாவிற்கு போட்டியாக: வெண்ணிற ஆடை நிர்மலா அறிமுகமான வெண்ணிறை ஆடை என்ற திரைப்படத்தில் தான் ஜெயலலிதாவும் அறிமுகம் ஆனார். பின் நாளில் ஜெயலலிதா அரசியலில் நுழைந்து மிகப்பெரிய உச்சத்தை தொட்டார். இந்த நேரத்தில் ஜெயலலிதாவிற்கும் எம்ஜிஆருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டதால், ஜெயலலிதாவிற்கு போட்டியாக வெண்ணிறஆடை நிர்மலாவை வளர்த்துவிட்டார்.
செய்யாறு பாலு: இந்த சம்பவம் குறித்து சினிமா விமர்சகரான செய்யாறு பாலு தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், எம்ஜிஆர், அதிமுக என்ற கட்சியை தொடங்கிய பின்னர் வெண்ணிற ஆடை நிர்மலாவை தனது சகோதரியாக ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு எம்எல்சி பதவி கொடுக்கப்படுகிறது.

திவாலான நடிகை: இந்த நேரத்தில் டிராபிக் ராமசாமி போல, 80களில் எதற்கு எடுத்தாலும் வழக்கு போட்டு வந்த சைதாப்பேட்டை கோபால் சாமி, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, தனது கடனை கட்டமுடியவில்லை என்று திவால் நோட்டீஸ் கொடுத்தவர். இவருக்கு எப்படி எம்எல்சி பதவி கொடுக்கலாம் என நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கிவிட்டார்.
எம்.ஜி.ஆர் எடுத்த அதிரடி முடிவு: இந்திய அரசியல் சாசனத்தின்படி திவால் ஆனவர் சட்டமன்றத்தில் அல்லது பாராளுமன்றத்தில் உறுப்பினராக முடியாது. இதனை அடுத்து வெண்ணிற ஆடை நிர்மலா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதனால் மனமுடைந்த எம்ஜிஆர் எம்எல்சி பதவியே இனிதேவை இல்லை என அதிரடியாக முடிவு எடுத்து, அந்த பதவியை காலி செய்து விட்டார். வெண்ணிற ஆடை நிர்மலாவின் திவால் நிகழ்வு அவரது அரசியல் வாழ்க்கையை திருப்பி போட்டது என்று செய்யாறு பாலு அந்த நிகழ்வை நினைவுப்படுத்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications











