Vidaamuyarchi: அஜித்தை பார்த்து யோவ் பூமர்னு சொல்றாங்க.. தியேட்டரே தெறிக்குது.. பிரபலம் ஷேரிங்!

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் தான் இன்றைக்கு இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படம் ரிலீஸ் ஆகியுள்ளதால், ரசிகர்கள், படத்தை கொண்டாடி வரவேற்றுள்ளனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை லைகா தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் மற்றும் ஆரவ் என பலர் நடித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் படம் பார்த்த விமர்சகர் செய்யாறு பாலு, படம் ஓடிக்கொண்டு இருந்த போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

விடாமுயற்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, உருவாக்கப்பட்ட படம். படத்தின் கதைக்கு, கதைக்களமாக அஜர்பைஜான் நாட்டினைத் தேர்வு செய்தது, நடிகர் அஜித் தான். மேலும் இயக்குநர் மகிழ் திருமேனி அமைத்துள்ள திரைக்கதைக்கு அஜர்பைஜானில் படத்தை உருவாக்கினால், படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என படத்தில், ஒரு பாடலைத் தவிர மீதமுள்ள மொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடத்தப்பட்டது.

ajithkumar cheyyaru balu

படப்பிடிப்பு நடைபெற்ற காலகட்டத்தில் மணல் புயல், மற்றும் பனிப்புயல் என மிகவும் மோசமான மற்றும் சவாலான சீதோஷ்ண நிலையை படக்குழுவினர் எதிர்கொண்டுள்ளனர். மிகவும் சவாலான சீதோஷ்ண நிலையில் தான் படத்தை முழுவதுமாக எடுத்து முடிக்க இவ்வளவு காலம் எடுத்தது என கூறப்படுகின்றது. இதற்கிடையில், அஜித்துக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிரச்னை, அஜித்துக்கும் மகிழ் திருமேனிக்கும் பிரச்னை என்றெல்லாம் தகவல்கள் உலா வந்தது. படப்பிடிப்பின்போது, அஜித் மற்றும் ஆரவ் மிகவும் ஆபத்தான கார் விபத்தில் சிக்கிக் கொண்டனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அஜித்: படத்தில் கமிட் ஆன போது, அஜித் தனது கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே வந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என உறுதியாகக் கூறியதாக பல பேட்டிகளில் இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்தார். அதேபோல் படம் முழுவதும் பிரமாதமான திரைக்கதையால் இயக்கியுள்ளார் என படம் பார்த்த செய்யாறு பாலு பாராட்டியுள்ளார். விடாமுயற்சி படத்தினைப் பார்க்க ஆந்திராவிற்கு கிளம்பிச் சென்று படம் பார்த்த செய்யாறு பாலு, அங்கு அதிகாலை 6 மணிக்கு காட்சியை பார்த்துவிட்டு படம் குறித்து பேசினார்.

ajithkumar cheyyaru balu

பூமர்: அதாவது, இந்தப் படத்தில் அஜித்துக்கு ஒரு மாஸ் இண்ட்ரோ கிடையாது, மாஸ் டயலாக் கிடையாது. அவரது எண்ட்ரியே மிகவும் சாதாரணமாகத்தான் உள்ளது. இதையெல்லாம் விட, மற்ற நடிகர்கள் இதுபோன்று தன்னை ட்ரோல் செய்யும் டயலாக்கை மற்றவர்களைப் பேச அனுமதிப்பார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அஜித் அப்படியான காட்சியில் நடித்துள்ளார். அதாவது, அஜித்தைப் பார்த்து "யோவ் பூமர்" என கூறுகிறார்கள். தியேட்டரே தெறிக்குது. இந்தக் காட்சிக்கு தியேட்டர் அதிரும் அளவுக்கு பிரமாதமான கைதட்டல் இருந்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

மங்காத்தா: அஜித் இதுபோலச் செய்வது இது முதல் முறை இல்லை. தனது 50வது படமான மங்காத்தா படத்தில் இளம் நடிகர் வைபவ்விடம் அடிவாங்குவது போல் நடித்தார். அதேபோல், பல காட்சிகளில் பிரேம்ஜி, மகத் உள்ளிட்ட பலர் அஜித்தை ட்ரோல் செய்வதைப் போன்ற காட்சிகளில் நடித்திருந்தார். தனது 50வது படமான மங்காத்தா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம். அதேபோல் விடாமுயற்சி படத்திலும் அஜித்துக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

ajithkumar cheyyaru balu

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X