ரவி மோகனுக்கு கெனிஷா கொடுத்த அழுத்தம்?.. மகன்களால்தான் இந்த பிரிவா?.. பிரபலம் ஓபன் டாக்

சென்னை: ரவி மோகன் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்த அறிவிப்பில் தனது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். இப்போது அந்த உறவும் பிரேக் அப் ஆகிவிட்டதாக தெரிகிறது. நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ரவி மோகன் ரொம்பவே எமொஷனலாகவும், உணர்ச்சிவசப்பட்டும் பேசினார்; அழுதார். இந்நிலையில் அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.

ரவி மோகன் - ஆர்த்தி - கெனிஷா விவகாரம் மீண்டும் பற்றி எரிய தொடங்கியிருக்கிறது. அதிலும் நேற்று ரவி மோகன் செய்தியாளர்களிடம் பேசிய விதத்தை பார்த்து பலரும் அவருக்காக இரக்கப்படுகிறார்கள். இதற்கு முன்பு ரவியும் அப்படி வெடித்து அழுது பார்த்ததில்லை. தன்னை அடிமை போல் வைத்திருந்தார்கள் எனவும்; கெனிஷா வந்த பிறகுதான் தன்னுடைய வாழ்க்கையில் கொஞ்சமேனும் நிம்மதி வந்தது என்றும் கூறியிருந்தார். மேலும், பிள்ளைகளை பார்க்கவிடுவதில்லை; மகன்களுக்கு நான்தான் பள்ளி படிப்புக்கான செலவுகளை பார்க்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

Cheyyaru Balu Claims Kenishaa s Son Separation Demand Triggered Ravi Mohan s Breakdown
Photo Credit:

செய்யாறு பாலு பேச்சு: ஆனால் ரவி கூறிய அத்தனை விஷயங்களையும் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் ஆர்த்தியின் தாயும், தயாரிப்பாளருமான சுஜாதா. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, " ரவி மோகன் ஸ்டூடியோ என்ற ஒன்றை ரவி ஆரம்பித்தார். தங்குவதற்கே இடமில்லை, காரை பிடுங்கிவிட்டார்கள் என்று சொன்னவருக்கு ஏது இவ்வளவு பணம் என்று தோன்றியது. வெளிநாட்டிலிருந்து பெரிய பணக்காரர் ஒருவர் இன்வெஸ்ட் செய்திருப்பதாகவும்; அரசியல் புள்ளியின் மருமகன் ஒருவர் இன்வெஸ்ட் செய்திருப்பதாகவும் தகவல்கள் வந்தன. யோகிபாபுவை வைத்துகூட ஒரு படத்தை ஆரம்பித்தார்கள். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென ஒரு ப்ரஸ் மீட் வைத்திருக்கிறார்.

ரவி மோகனை இதுவரை இப்படி பார்த்ததில்லை: ரவியை இதற்கு முன்பு இப்படி பார்த்ததே இல்லை. ரவி சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து இன்டஸ்ட்ரிக்கு வந்தாலும் அதை தக்க வைக்க திறமை வேண்டும். இந்த இடம் எவ்வளவு முக்கியமான இடம். என்னை தொடர்ந்து டார்கெட் செய்கிறீர்கள் என்கிறார். நான் யாருடன் இருந்தால் என்ன பிரச்னை என கேட்கிறார். அவர் மூன்று எழுத்து இட்லி நடிகையை குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read
தூங்கும் சிங்கத்தை எழுப்பாதீங்க.. ரவி மோகன் விஷயத்தில் கெனிஷாவுக்கு ஆர்த்தி ரவி எச்சரிக்கை
தூங்கும் சிங்கத்தை எழுப்பாதீங்க.. ரவி மோகன் விஷயத்தில் கெனிஷாவுக்கு ஆர்த்தி ரவி எச்சரிக்கை

அவர்தான் நடத்தி வைத்தார்: அந்த மூன்று எழுத்து இட்லி நடிகை ரவி - ஆர்த்தி திருமணத்துக்கு அச்சாரமாக இருந்தவர். ரவி கதறி அழுததை பார்த்து எனது மனம் கஷ்டப்பட்டுவிட்டது. ஆர்த்தி தரப்பும், ரவி தரப்பும் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அடிமையாக இருந்தேன் என ரவி கூறுகிறார். மகன்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். ஒரு மகனை லண்டனுக்கும், ஒரு மகனை மும்பைக்கும் அனுப்பிட வேண்டும் என்றும் கெனிஷா ரவியிடம் கூறியதாக வெளியே பேசிக்கொள்கிறார்கள்.

அதே மாதிரியான பிரச்னை: அதனால்தான் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதாம். யாருமே குழந்தைகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். பிரபுதேவா - நயன்தாரா விஷயத்திலும் இதே மாதிரியான கோரிக்கையைத்தான் நயன் வைத்ததாகவும், அதை பிரபுதேவா ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அப்போதே பேசினார்கள். ரவிக்கு கெனிஷா தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தமும் இதுதான். இதனால்தான் வெகுண்டெழுந்தார் என சொல்கிறார்கள்.

வெறிப்பிடித்துவிட்டது ரவிக்கு: கெனிஷா போய்விட்டதால் ரவி மோகன் வெறிப்பிடித்த மனிதர் போல் ஆகிவிட்டார் என்று இன்னொரு தரப்பு சொல்கிறார்கள். பெண் பாவம் மட்டுமில்லை. ஆண் பாவமும் பொல்லாதது. பொதுவாக பெண் மனது தைரியமாக இருக்கும். ஆணின் மனது அப்படி இல்லை. ரவி மோகன் கதறி அழுத வீடியோவை பார்க்கையில் கல் நெஞ்சம்கூட கரையும்படித்தான் இருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X