Rajinikanth: ரஜினிக்கு இன்னும் அந்த புத்தி மாறல.. செய்யாறு பாலுவின் பேச்சினால் ரசிகர்கள் அட்டேன்சன்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கக்கூடிய இவருக்கு ,வரும் 12ஆம் தேதி 74 வது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஜினிகாந்த் பொருத்தவரை கடந்த 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடக்கத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் ஒரு கட்டத்திற்கு பின்னர் கதாநாயகனாக உருவெடுத்தார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனார்கள்.

ரசிகர்கள் இவருக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது மட்டுமல்லாமல் இவர் அந்த படங்களை வெண்ணிலா படங்களாக மாற்றினர். இவர் ஒரு படத்தில் இருக்கின்றார் என்றாலே படத்தினை வெளியிட தயாரிக்க தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தார்கள். தென்னிந்திய மொழிகளான தமிழ் கன்னடம் மலையாளம் தெலுங்கு அதேபோல் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஹாலிவுட் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
அரசியல்: ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்பவர்கள் அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவை பெற்றவர்கள் ஆட்சியில் அமரும் அளவிற்கு அல்லது அவர்களை ஆட்சியில் அமர வைக்கும் அளவிற்கு ரஜினிகாந்த் இயல்பாகவே மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியது. ரஜினியை நேரடியாக அரசியலில் ஈடுபடுவார் என பேச்சுகள் எழுந்த நிலையில், நான்காண்டுகளுக்கு முன்னர், தனது ரசிகர்களிடம் நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என தெளிவாக கூறிவிட்டார்.

விளம்பரங்கள்: இன்றைக்கும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் மலர்ந்து வந்த காலத்தில் தொடங்கி இப்போது வரை ஒரு விஷயத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றார். அதாவது கமல்ஹாசன், விஜய், சூர்யா, அஜித், மாதவன், கார்த்தி இதுபோன்ற பல நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளனர். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை விளம்பர படங்களில் நடித்ததே இல்லை. அவரை அம்பானி மற்றும் அதானி குடும்பத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கச் சொல்லி வாய்ப்புகள் வந்தபோது கூட அவர் அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
ரஜினி புத்தி: இது தொடர்பாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு வெளியிட்டுள்ள வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அப்போது முதல் இப்போது வரை இந்த குணம் மட்டும் மாறவே இல்லை எனவும் விளம்பர படங்களில் நடிப்பதை தொடர்பாக அவர் தனது புத்தியை அதாவது தனது முடிவினை மாற்றிக் கொள்ளவே இல்லை என பாராட்டி உள்ளார். செய்யாறு பாலகன் இந்த கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகிறனர்.


Click it and Unblock the Notifications











