Actor Vijay: மிகவும் மோசமானவரா விஜய்.. Badass பாடல் சொல்வது என்ன?

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்தின் இரண்டாவது பாடல் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

செப்டம்பர் 30ம் தேதி நடக்கவுள்ளதாக திட்டமிடப்பட்டிருந்த லியோ படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Cheyyaru Balu comments about Vijay and his second single Badass

இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்வகையில் தற்போது இரண்டாவது சிங்கிள் அமைந்துள்ளது.

விஜய்யின் 2வது சிங்கள் குறித்து பேசிய செய்யாறு பாலு: நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் லியோ படம் ரிலீசாகவுள்ளது. அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மரண மாஸாக உள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பிரமோஷன்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

Cheyyaru Balu comments about Vijay and his second single Badass

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அடுத்தடுத்தப் போஸ்டர்கள், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களை என்டர்டெயின் செய்தது. இதையடுத்து நேற்றைய தினம் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. முன்னதாக இதன் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கட்டிப் போட்டது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் நேற்று மாலை வெளியான Badass என்ற இந்தப் பாடலை படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே பாடியுள்ளார்.

படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 30ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் பின்புலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இசை வெளியீட்டில் விஜய்யை பார்க்க வேண்டும் அவரது பேச்சை, குட்டிக் கதையை கேட்க வேண்டும் என்று ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

Cheyyaru Balu comments about Vijay and his second single Badass

ஆனால் திடீரென நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், உடனடியாக தற்போது 2வது சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் விஜய் மற்றும் த்ரிஷாவின் ரொமான்டிக் பாடலாக வெளியாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய்யின் அதிரடி பாடலாக அமைந்துள்ளது. Badass என்ற இந்தப் பாடல் தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Badass என்றால் மிகவும் மோசமானவன், என்னிடம் வைத்துக் கொள்ளாதே என்று பொருள் என்றும் என் தலைவனிடம் வைத்துக் கொள்ளாதே என்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ள நிலையில், ஒரு விஜய் நெருப்பிற்கும் மற்றொரு விஜய் பனிபடர்ந்த இடத்திற்கும் ஒப்பிடப்பட்டுள்ளார். பல ராஜாக்களை பார்த்தாச்சுடா, கத்தி ரொம்ப கூராச்சுடா போன்ற பாடலின் வரிகளும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தற்போது இந்தப் பாடல் குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ரசிகர்களின் இந்த மனநிலை குறித்து வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாடலிலேயே அண்ணன் ரெடி, போஸ்டர் ரெடி வரிகளிலேயே விஜய்யின் அரசியல் பேசப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அனிருத்தின் மேஜிக்கும் இந்த அடுத்தடுத்த பாடல்களில் தெறிக்க விடப்பட்டுள்ளதாகவும் விஜய்க்கான மீட்டரை அவர் சரியாக பொருத்தியுள்ளதாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். 14 நிமிடத்தில் இரண்டாவது பாடல் மில்லியன் வியூசை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X