வீட்டு வாசலை கூட தாண்டாத விஜய்.. இதெல்லாம் அரசியலுக்கு செட்டாகாது.. செய்யாறு பாலு விளாசல்!
சென்னை: புதுச்சேரியை மொத்தமாக ஃபெஞ்சல் புயல் பாதித்தது. தமிழ்நாட்டின் விழுப்புரம் பகுதியையும் புயல் பாதிப்பு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கிய நிலையில், தவெக தலைவர் விஜய் ஒரு அறிக்கை கூட விடவில்லையே என முதலில் பஞ்சாயத்துகள் கிளம்பின. அதன் பின்னர், விஜய் திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து ட்வீட் போட்டார். மேலும், வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை தனது பனையூர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கே சென்று மக்களுக்கு உதவி செய்யாமல் விஜய் வீட்டு வாசலை கூட தாண்டாமல் இருக்காரே என செய்யாறு பாலு கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் பொது வெளியில் வந்தால் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதற்காக இப்படி மக்களை தனது சொந்த செலவிலேயே அழைத்து வந்து உதவி செய்கிறார் என விஜய்யின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உஷாரா வேலை பார்க்கும் விஜய்: வெளியே வந்தால் கூட்டம் கூடி விடும் என்பதால் நடிகர் விஜய் களத்துக்கு செல்லாமல் தனது இடத்துக்கு பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து உதவி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் விஜய் எங்க இடத்துக்கு வந்து உதவி செய்தால் தான் வாங்குவோம். இல்லையென்றால் வாங்கமாட்டோம் என எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், விஜய் நேரில் சென்று நிதியுதவி அளித்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதை வைத்து அரசியல் செய்யலாம் என பலர் நினைக்கின்றனர் என விஜய்யின் செயலுக்கு அவரது ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
வாசப்படி தாண்டாத விஜய்: ஆனால், நடிகர் விஜய் தனது இடத்துக்கு மக்களை அழைத்து வந்து நிவாரண உதவிகளை தருவது சரியல்ல என ப்ளூ சட்டை மாறன் தொடங்கி செய்யாறு பாலு வரை பலரும் விமர்சிக்க தொடங்கி விட்டனர். வீட்டு வாசப்படி தாண்டாத விஜய் என செய்யாறு பாலு தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு விஜய் மாநாட்டில் சொல் முக்கியமல்ல செயல் தான் முக்கியம் என்றும் களத்தில் மக்களோடு மக்களாக இறங்க முடிவு செய்துவிட்டேன் என பேசிவிட்டு தற்போது இப்படி செய்யலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
களத்தில் திமுக: மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் இரவு பகல் பாராமல் மக்கள் பணி செய்து வருவதாகவும் விஜய் அப்படி இறங்கி வேலை செய்தால் தான் அவரது கனவு எல்லாம் பலிக்க ஓரளவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











