Actor Suriya: வணங்கான் படத்தில் 5 கோடி ரூபாய் நஷ்டம்.. ஆனாலும் தலை தெறிக்க ஓடிய சூர்யா!
சென்னை: இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் தற்போது அருண் விஜய் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் முன்னதாக நடிகர் சூர்யா இணைந்திருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார்.
இதையடுத்து படத்தில் அருண் விஜய் கமிட்டானார். படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவை தலை தெறிக்க ஓட வைத்த இயக்குநர் பாலா: நடிகர் சூர்யா -இயக்குநர் பாலா காம்பினேஷனில் வெளியான நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் சூர்யா கேரியரில் மிகச்சிறப்பாக அமைந்தவை. அவருக்கு நடிகன் என்ற சிறப்பான அந்தஸ்தை இந்தப் படங்கள் கொடுத்தன. இந்தப் படத்தை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் வணங்கான் படத்தில் இணைந்தது. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்றன.
இயக்குநர் பாலா மிகச்சிறந்த டைரக்டராக சர்வதேச அளவில் போற்றப்படுபவர். ஆனாலும் அவரின்கீழ் பணிபுரிவது மிகவும் கஷ்டம் என்று நடிகர்கள் எப்போதுமே விமர்சிப்பதுண்டு. அவர் யாரிடமும் கதையை சொல்ல மாட்டார். அவர் நடிக்க கூப்பிட்டால் நடிக்க நடிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவரிடம் கதை கேட்காமல்தான் நடிகர், நடிகைகள் நடித்துக் கொடுத்துவரும் சூழல் சினிமாவில் காணப்படுகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக படம் இல்லாமல் இருந்த பாலாவிற்கு தன்னுடைய தயாரிப்பில் அடுத்தப்படத்தை கொடுக்க சூர்யா முன்வந்தார். அவருடைய தந்தை சிவக்குமாரின் அறிவுறுத்தலின்பேரில் இந்தக் கூட்டணி மீண்டும் உருவானது. இந்நிலையில், ஒரு கட்டத்தில் படம் குறித்தும் அதன் கதைக்களம் குறித்தும் சூர்யா, பாலாவிடம் கேட்டதாக தெரிகிறது. இதை கேட்டவுடன் மிகுந்த கோபமடைந்த பாலா, சூர்யாவை பல கிலோமீட்டர் தூரம் பீச்சில் ஓட விட்டதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தின் 35 நாட்கள் சூட்டிங் நடந்து முடிந்திருந்த நிலையில், சூர்யாவிற்கு தயாரிப்பாளராக 5 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டிருந்தபோதிலும், சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக உருமாறியுள்ள சூர்யா, வணங்கான் படத்தில் தொடர்ந்து நடித்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் அதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தற்போது பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதை நிரூபிக்கும் வகையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு கையில் பிள்ளையாரையும் ஒருகையில் பெரியாரையும் ஏந்தியபடி இந்த போஸ்டரில் அருண் விஜய் காணப்படுகிறார். மேலும் இந்தப் போஸ்டரில் முழுமையாக சேறு பூசியபடி காணப்படும் அருண் விஜய், தோற்றத்தில் சூர்யாவை பிரதிபலிக்கும் வகையில் காணப்படுகிறார். சூர்யாவை வெறுப்பேற்றும் வகையில் இந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளதா என்றும் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். சூர்யா படத்திலிருந்து விலக இந்த போஸ்டர் காரணமாக இருக்கலாம் என்றும் இதுகுறித்து கேட்டபோதுதான் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்றும் செய்யாறு பாலு மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











