லேடி சூப்பர் ஸ்டார்னாலும் இப்படியா நடந்துக்கணும்! நயனின் அப்பார்ட்மெண்ட் அராஜகத்தை சொன்ன பிரபலம்

சென்னை: தமிழ் சினிமா குறித்து ஓரளவுக்கு தெரிந்தவர்களுக்கு நிச்சயம் நடிகை நயன்தாரா குறித்து தெரிந்திருக்கும். ஐயா படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய நயன் சினிமா வாழ்க்கையிலும் தனது சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து தற்போது, லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

நடிகை நயன்தாரா தனது ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் சிம்புவை காதலித்தார் என்ற தகவல் வெளியானது. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக காதலில் முறிவு ஏற்பட்டது. அதன் பின்னர் வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவா மீது காதல் ஏற்பட்டதால் பிரபு தேவா பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டார். இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலகட்டதில் இவர்களது காதலும் முறிவுக்கு வந்தது. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்னர் நயன்தாரா கம்பேக் கொடுப்பதே சிரமம் என பலர் கூறினர்.

Cheyyaru Balu Nayanthara Vignesh Shivan

ஆனால் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் கோலோச்சி வருகின்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஹிந்தி படமான ஜவான் ரூபாய் ஆயிரம் கோடி வசூல் செய்தது. நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதால், இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு தென் இந்திய பிரபலங்கள் தொடங்கி பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் வரை கலந்து கொண்டனர்.

யன் விக்கி குடும்பம்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர், உலக் என பெயரிட்டனர். நயன் - விக்கி குடும்பத்தினர் தற்போது ஹாங்காங்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

சமந்தாவுக்கு கைமாறிய மலையாளப் படம்: இந்நிலையில் நடிகை நயன்தாரா மலையாள படத்தில் நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நயன்தாரா தரப்பில் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினால் தான் படத்தில் நடிப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. இதனால் இந்த படம் சமந்தாவுக்கு கைமாறியதாகவும் பேசப்பட்டது.

அப்பார்ட்மெண்ட் அராஜகம்: இந்நிலையில், நடிகை நயன்தாரா தான் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டில் நடந்து கொள்ளும் முறை குறித்த தகவலை பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு ஒரு வீடியோவில் பேசியுள்ளார். அதில், நடிகை நயன்தாரா வீட்டு வாசலில் எக்கச்சக்கமான செருப்புகள் எப்போதும் வழியை அடைத்தபடி கிடக்குமாம். மேலும் நயன்தாரா அப்பார்ட்மெண்டில் நடந்து வரும்போது எதிரே யாரும் வரக்கூடாதாம். தங்களது குழந்தைகள் நீச்சல் குளத்தில் விளையாடும்போது மற்றவர்கள் அவர்களை போட்டோ எடுப்பதை ஒருபோதும் அனுமதிப்பது இல்லையாம்.

இதுமட்டும் இல்லாமல், தங்களது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யவரும் உணவு டெலிவரி ஊழியர்கள் சேவகர்கள்போல ஒரு ஓரமாக நின்றுதான் உணவை கொடுத்துவிட்டு வரவேண்டுமாம். இவ்வாறு பல கண்டிஷன்கள் போட்டபடிதான் அந்த அப்பார்ட்மெண்டில் நயன்தாரா குடும்பத்தினர் இருக்கின்றனராம். இவ்வாறு செய்யாறு பாலு அந்த வீடியோவில் பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X