தளபதி 68 கதை இப்படி தான் இருக்கும்.. அதிரடியான அப்டேட்டை வெளியிட்ட பிரபலம்!

சென்னை : தளபதி 68 திரைப்படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என்று சினிமா பிரபலம் ஒருவர் படம் குறித்து சூப்பரான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தை, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லியோ : விஜய் நடித்து வரும் லியோ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் இரண்டாவது முறை கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் இறுதிக்கட்ட காட்சி ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

cheyyaru balu has given an interview about Thalapathy 68 story

தளபதி 68 : லியோ படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அதற்குள் விஜய்யின் 68 திரைப்படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. முதலில் தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், பின் பாலிவுட்டில் பிசியானதால் பிரபல தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாய்ப்பு அதிகம் : இது குறித்து சினிமா விமர்சகரான செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில் , விஜய்யிடம் சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கோபிசந்த் ஆகியோர் கதை சொன்னார்கள். இதன்பிறகுதான் தளபதி 68 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் தளபதி 68 படத்தில் இணைவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

காரணம் இவர் தான் : அதற்கு காரணம் என்னவென்றால், மங்காத்தா படப்பிடிப்பின் போது அஜித்தையும் விஜய்யையும் சந்திக்க வைத்தவர் வெங்கட்பிரபு, அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இப்போது வரைக்கும் டிரெண்டிங்கில் உள்ளது.அதன்பிறகு அவர்கள் பல நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டாலும் தொடக்கமாக இருந்தது இந்த சந்திப்பு தான்.

மங்காத்தா 2 : இந்த படம் மங்காத்தா 2 படமாக இருக்க வாய்ப்பு உள்ளதால், மங்காத்தா முதல் பாகத்தில் இருந்து சில காட்சிகளை சேர்ப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே போல ஆரம்ப காலகட்டத்தில் சென்னை 28, சரோஜா போன்ற விளையாட்டுத் தனமான படங்களை இயக்கி வந்த வெங்கட்பிரபு,மங்காத்தா, மாநாடு போன்ற டைம் ட்ரைவல் படத்தை இயக்கி இருப்பதால், தளபதி 68 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X